சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'கங்குவா' படத்தில் நடித்து வரும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் 'கே ஜி எஃப்' படப் புகழ் நடிகர் பி. எஸ். அவினாஷ் இணைந்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கங்குவா'. இதில் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோருடன் 'கே ஜி எஃப்' படப் புகழ் நடிகர் பி. எஸ். அவினாஷ் இணைந்திருக்கிறார்.
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பீரியாடிக் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. பல நூற்றாண்டு முந்தைய காலகட்டத்திய மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படபிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் 'கே ஜி எஃப்' பட நடிகர் பி எஸ் அவினாஷ் சூர்யாவிற்கு வில்லனாக நடித்து வருகிறார். இது தொடர்பான தகவலை நடிகர் அவினாஷ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பிரத்யேக புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
இதனிடையே இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஐந்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM