ரொனால்டோவின் புதிய கின்னஸ் சாதனை

Published By: Sethu

22 Jun, 2023 | 11:37 AM
image

போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 200 சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி புதிய சாதனை படைத்துள்ளார். 

யூரோ 2024 தகுதிகாண் போட்டியொன்றில் நேற்றுமுன்தினம் ஐஸ்லாந்து அணியுடன் போர்த்துகல் அணி மோதியது.

இது ரொனால்டோவின் 200 ஆவது சர்வதேச போட்டியாகும். இதனை முன்னிட்டு, இப்போட்டிக்கு முன்னர் கின்னஸ் சான்றிதழும் ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் நடைபெற்ற இப்போட்டியின் 89 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோல் புகுத்தினார். இதன் மூலம், 1:0 விகிதத்தில் இப்போட்டியில் போர்த்துகல் வென்றது.

 2022 ஆம் ஆண்டு தனது 196 ஆவது போட்டியில் விளையாடியதன் மூலம், ஆகக்கூடுதலான சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஆண் வீரர் எனும் சாதனையை  குவைத்தின் பதேர் அல் முதுவாவுடன் ரொனால்டோடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

2003 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ரொனால்டோ இதுவரை சர்வதேச போட்டிகளில் 123 கோல்களைப் புகுத்தியுள்ளார்.

பெண்களில் 200 இற்;கு அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாயோரின் எண்ணிக்கை 25 இற்கும் அதிகமாகும். அமெரிக்காவின் கிறிஸ்டைன் லில்லி 354  சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52