மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில்  அறிவித்துள்ளார்.

குறித்த கோப் அறிக்கையானது கடந்த ஒக்டோபர் மாதம் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.