ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இறந்த காலத்தை புறக்கணித்து எதிர்காலத்தை மையப்படுத்தியுள்ளது - பீரிஸ் குற்றச்சாட்டு

Published By: Vishnu

21 Jun, 2023 | 10:12 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஊழல் செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குவது தொடர்பில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இறந்தகாலத்தை புறக்கணித்து எதிர்காலத்தை மையப்படுத்தியதாக சட்டமூலம் காணப்படுகிறது.

சட்டமூலத்தில் ஒருசில விடயங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) ஊழல்  எதிர்ப்பு சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது,

ஊழல் எதிர்ப்பு சட்டம் காலத்துக்கு பொருத்தமானது. நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.வெளிநாட்டு முதலீடுகளை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கும் புரையோடிப்போயுள்ள ஊழல் ஒரு தடையாக உள்ளது.

ஊழல் ஒழிப்பு என்ற நோக்கம் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட முடியாது.சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.அவற்றை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் திருத்தங்களை முன்வைக்கும் வாய்ப்பை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த சட்டமூலத்தில் அடிப்படை பிரச்சினைக்கான தீர்வு உள்வாங்கப்படவில்லை.மோசடி செய்யப்பட்ட அரச நிதி வெளிநாடுகளில் முதலீடு அல்லது வைப்பிலிடப்பட்டுள்ளன.ஆகவே இந்த நிதியை அரசுடமையாக்க உரிய வழிமுறை சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரச நிதியை மீண்டும் அரசுமடையாக்க சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த சட்டமூலத்தில் தெளிவான சுட்டிக்காட்டல்கள் ஏதும் கிடையாது.இறந்தகாலம் குறித்து கவனம் கொள்ளப்படவில்லை. எதிர்காலத்தை மையப்படுத்தியதாக சட்டமூலம் காணப்படுகிறது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் 325000 பேர் தமது சொத்துக்களை பகிரங்கப்படுத்த நேரிடும்.இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பது சந்தேகத்துக்குரியது.அரச அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அதாவது உச்சபட்சமாக அரச அதிகாரத்தை பயன்படுத்தும் தரப்பினரது வருடாந்த சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தும் வழிமுறை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் காணப்படுகின்றன.

எம்.வி.எக்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.சட்டங்களை இயற்றுவதால் மாத்திரம் இலக்கை அடைய முடியாது.சட்டங்கள் காகிதத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டது என்று மக்கள் கருதுவது உண்மையாக உள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊழல் பெறும் நபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுவதுடன்,ஊழல் தொடர்பில் ஒரு நபர் வழங்கும் தகவல் பொய் என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.பொய்யான சாட்சியம் வழங்குவதற்கு எதிராக தண்டனை சட்ட கோவையில் தண்டனை வழங்குவத தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் வழங்கும் நபருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் போது தகவல் வழங்க யார் முன்வருவார்.ஆகவே தகவல் வழங்குபவர் தொடர்பில் சட்டமூலத்தில் விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது.ஆகவே அது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...

2024-12-02 00:30:51
news-image

எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித...

2024-12-02 00:17:47
news-image

தேசிய பட்டியல் உறுப்பினராக காஞ்சன, ரவி...

2024-12-01 21:40:21
news-image

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி...

2024-12-01 22:32:20
news-image

தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றியிருக்கிறது...

2024-12-01 21:39:38
news-image

மாத்தளையில் கொள்ளைச் சம்பவம் ; பொலிஸார்...

2024-12-01 21:34:47
news-image

எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது இந்த...

2024-12-01 20:47:45
news-image

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க...

2024-12-01 20:25:15
news-image

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி!

2024-12-01 19:47:37
news-image

பெரியநீலாவனையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2024-12-01 21:36:27
news-image

தலங்கமையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்...

2024-12-01 18:23:09
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது...

2024-12-01 21:37:06