ஜப்பானின் சுற்றுலா நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்

Published By: Nanthini

21 Jun, 2023 | 02:20 PM
image

டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா நடத்துநர்களுடன் இ.தொ.கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.  

இந்த சந்திப்பில் ஜப்பான் நாட்டில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர், ஜப்பானுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் GSA பணிப்பாளர் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜப்பானியர்கள் இலங்கையில் பார்வையிடாத இடங்களை பார்வையிடுவதை ஊக்குவிக்கும் வகையிலும், கிழக்கு மாகாணம், மலையகம் ஆகிய இரண்டு பிராந்தியங்களிலும் அவர்கள் தனிப்பட்ட அனுபவங்களை பெறுவதற்காகவும் கிழக்கு மற்றும் மலையகத்துக்கு வருமாறு செந்தில் தொண்டமானால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அத்தோடு, ஜப்பானியர்கள் கிழக்கு மற்றும் மலையக பகுதிகளை பார்வையிடுவதற்காக சில சுற்றுலாத் தலங்களை செந்தில் தொண்டமான் பரிந்துரை செய்தார்.

அதன்படி, டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களை பார்வையிடுவது, சர்ஃபிங், ஸ்கூபா டைவிங், பவளப்பாறை படகு சவாரி, வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம், மான் நகரம், தொல்லியல் மற்றும் கலாசார தளங்கள் மற்றும் சில இயற்கை சுற்றுலா தளங்களையும் கிழக்கு மாகாணத்திலும், மலைக் காட்சிகள், மலையேற்றம் மற்றும் முகாமிடுதல், தேயிலை தொழிற்சாலைகள், உலக முடிவு, இயற்கை சுற்றுலாத்தலம், ஒன்பது வளைவு பாலம், லிப்டன் சீட், நக்கிள்ஸ் மலைத்தொடர் போன்றவற்றை மலையகத்திலும் பார்வையிடுவதற்கு ஏற்ற இடங்களாக சுட்டிக்காட்டி குறிப்பிட்டார். 

கிழக்கு ஆளுநரின் இப்பரிந்துரைக்கு அமைய, ஜப்பானின் சுற்றுலா நடத்துநர்கள் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகை தருவதாக ஒப்புதல் அளித்ததுடன், இலங்கை சுற்றுலாத் தலங்களை ஊக்குவிப்பதற்காக தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை...

2024-03-03 14:46:29