bestweb

வசூலில் சாதனை படைத்து வரும் 'ஆதி புருஷ்'

Published By: Ponmalar

21 Jun, 2023 | 10:05 PM
image

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் வசூலில் புதிய சாதனையை படைத்து பான் இந்திய சுப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார்.

பொலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான மூன்று தினங்களில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 340 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

இதனிடையே நடிகர் பிரபாஸ் தற்போது 'கே. ஜி. எஃப்' படப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'சலார்' எனும் திரைப்படத்திலும், தேசிய விருது பெற்ற இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் 'புராஜெக்ட் கே' எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right