இலங்கையில் சமீபத்தில் பரவலாக இடம்பெற்றுள்ள துப்பாக்கிசூட்டு சம்பவங்களிற்கும் போதைப்பொருள் கடத்தலிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிசூட்டு சம்பவங்களில் போதைப்பொருள் கும்பல்களிற்கு தொடர்பிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் தொடர்புள்ளவர்களை அடையாளம் கண்டு கைதுசெய்யும்நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்,என தெரிவித்துள் பொலிஸ்பேச்சாளர் தங்களுடைய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு போட்டியாக உள்ளவர்களை பழிவாங்குவதற்காக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் அதனுடன் தொடர்புள்ளவர்களும் துப்பாக்கி பிரயோகங்களை திட்டமிடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக இவர்களில்சிலர் முன்னர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் வீதிக்கு வந்து தங்களின் போட்டியாளர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களை பிணையில் விடுதலை செய்வது தொடர்பான சட்டங்களை நாங்கள் இறுக்கமாக்கவேண்டும்,அதனை செய்தால் அவர்கள் வீதிக்கு வந்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைதடுக்கலாம்,எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM