நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி மழையால் இடைநடுவில் கைவிடப்பட்டது.

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியும் 3 ஆவது போட்டியில் இலங்கை அணியும் பெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில்  2-1 என்ற நிலையில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் நெல்சன் நகரில் இன்று ஆரம்பமாகியது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.ஆரம்பமே போட்டியில் மழை குறுக்கிட போட்டி 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து75 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தடைப்பட 4 ஆவது போட்டி எவ்வித முடிவுகளும் இன்றி கைவிடப்பட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.