பாகிஸ்தான் கால்பந்தாட்ட அணியினர் 2014 க்குப் பின் முதல்தடவையாக இந்தியா பயணம்

21 Jun, 2023 | 06:12 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் புதன்கிழமை (21) ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண (SAFF) கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்காக பாகிஸ்தான் அணி அங்கு பயணமாகிறது.

இந்தியா செல்வதற்காக பாகிஸ்தான் அணியினருக்கு இந்திய விசா வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்காசிய அயல்நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த வருட சாவ் சம்பியன்ஷிப் ஆரம்பப் போட்டியில் மோதவுள்ளன.

இதேவேளை, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு பீபா தடை விதித்துள்ளதால் சாவ் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை  அணி   பங்குபற்றவில்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாக அரசியல் பதற்றம் நிலவி வருவதால் இரண்டு நாடுகளும் பரஸ்பர விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவது மிகவும் அபூர்வமாக இருந்து வருகிறது.

மும்பையில் 2008இல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

பெங்களூரில் நடைபெறவுள்ள 8 நாடுகளுக்கு இடையிலான சாவ் சம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதானது அந் நாட்டின் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதை உறுதிசெய்வதாக அமைகின்றது.

'அர்ப்பணிப்புடைய விளையாட்டு வீரர்களாக அரசியல் எல்லைகளைத் தாண்டி நாடுகளுக்கு இடையில் வலுவான உறவுகளை வளர்ப்பத்தில் விளையாட்டுத்துறைக்கு சக்தி இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்' என ஏ. எவ். பி.க்கு பாகிஸ்தான் அணித் தலைவர் யூசுப் பட் கூறியுள்ளார்.

'இந்த சுற்றுப் பயணத்தின்போது பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரசிகர்களின் மனங்களை கவர்வோம்' எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா செல்லும் 24 வீரர்கள், 8 அதிகாரிகள் கொண்ட பாகிஸ்தான் குழாத்திற்கு திங்கட்கிழமை மாலை இந்தியா விசா வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் கடைசியாக 2014இல் இந்தியாவில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியதுடன் அந்தத் தொடரை சமப்படுத்தியிருந்தது.

எனினும் பங்களாதேஷில் 2018இல் நடைபெற்ற சாவ் சம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை 3 - 1 என்ற கோல்கள் கணக்கில் இந்தியா வெற்றிகொண்டிருந்தது.

இந்த வருட தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் குவைத், லெபனான் ஆகிய நாடுகள் அழைப்பு அணிகளாக பங்குபற்றுகின்றன.

தெற்காசிய கால்பந்தாட்டத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அந்த இரண்டு அணிகளுக்கும் இந்தியா கால்பந்தாட்ட சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், குவைத், நேபாளம் ஆகியனவும் பி குழுவில் லெபனான், பங்களாதேஷ், மாலைதீவுகள், பூட்டான் ஆகியனவும் பங்குபற்றுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20