மைக்கல் ஜாக்சன் திட்டமிட்டு கொலை ; மகள் அதிர்ச்சி பேட்டி (வீடியோ இணைப்பு)

Published By: Raam

25 Jan, 2017 | 02:55 PM
image

பிரபல பொப் இசை பாடகரான மைக்கல் ஜாக்சன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மகள் பாரிஸ் ஜாக்சன் கருத்து தெரிவித்திருப்பது மைக்கல் ஜாக்சன்  ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொப் இசை  பாடகரான மைக்கல் ஜாக்சன் தனது 50 ஆவது வயதில் கடந்த 2009 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் பின்னர் அவரது குடும்ப வைத்தியர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியது தான் அவர் இறப்பிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் ஜாக்சன் மகளான பாரிஸ் ஜாக்சன் தன் தந்தை ஜாக்சன் கொலை செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது அப்பா கொலை செய்யப்பட்டுள்ளார். இது என் குடும்பம் மற்றும் பெரும்பாலான ரசிகர்கள் பலருக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

என் அப்பாவை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இது ஒரு சதி திட்டமாக இருக்கலாம். காரணம் தன் அப்பா பாடகராக இருந்த காலக்கட்டங்களில் அவரின் பாடல் திறமையினால் ஏராளமான பாடகர்கள் நிறைய பிரச்சினைகளில் இருந்தனர். மேலும் தன் அப்பாவுக்கு மர்மமான முறையில் நிறைய எதிரிகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் நான் யாரையும் குறிப்பிட்டு கூறிப்பிடவில்லை என்றும் ஆனால் இதை நினைக்கும் போது தனக்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும், இதற்கு மேல் தான் எதையும் கூற விரும்பவில்லை என்று மனம் வருந்தி தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17