வெளியானது அதிர்ச்சிதரும் ஆய்வறிக்கை ; 31 வீத வறுமையில் பெருந்தோட்ட மக்களே அதிகளவில் பாதிப்பு

Published By: Digital Desk 3

20 Jun, 2023 | 01:46 PM
image

ரொபட் அன்டனி  

இலங்­கையில் 7 மில்­லியன் மக்கள் வறு­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக லேர்ன் ஏசியா என்ற அமைப்பு முன்­னெ­டுத்த ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது 2019 ஆம் ஆண்டு வரையில் மூன்று மில்­லியன் மக்­களே வறு­மையின் கீழ் இருந்­த­தா­கவும் எனினும் கடந்த பொரு­ளா­தார நெருக்­க­டிகள் கார­ண­மாக வறு­மையின் கீழ் தள்­ளப்­பட்­டுள்­ளோரின் எண்­ணிக்கை 7 மில்­லி­யன்­க­ளாக உயர்­வ­டைந்­தி­ருப்­ப­தாக ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அதா­வது கடந்த 2019 ஆம் ஆண்டு 14 சதவீத­மாக இருந்த இலங்­கையின் வறுமை நிலை 2023 ஆம் ஆண்­டாகும் போது 31 சதவீத­மாக அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.இலங்­கையின் சனத்­தொ­கையில் 7 மில்­லியன் மக்கள் அதா­வது 70 இலட்சம் பேர் வறு­மைக்குள் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றனர்.  

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்­கையில் தீவி­ர­ம­டைந்த டொலர் நெருக்­கடி மற்றும் பொரு­ளா­தார நெருக்­கடி இந்த வறுமை நிலை அதி­க­ரிப்­புக்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கி­றது.  

சர்­வ­தேச அறிக்­கைகள்

இலங்­கையின் வறுமை நிலை தொடர்­பாக பல்­வேறு அமைப்­புகள் பல்­வேறு சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள் தொடர்ச்­சி­யாக அறிக்­கை­களை வெளி­யிட்டு வரு­கின்­றன.  ஐக்­கிய நாடு­களின் உணவு மற்றும் விவ­சாய  அமைப்பு,  உலக உணவுத் திட்டம், யுனிசெப் அமைப்பு உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­புகள் இலங்­கையின் வறுமை நிலை மிகவும் கவ­லைக்­கு­ரிய நிலையில் இருப்­ப­தாக  ஆய்வு அறிக்­கை­களை வெளி­யிட்டு வரு­கின்­றன.  முக்­கி­ய­மாக மக்கள் தமது உணவு தேவை­களை குறைத்துக்கொண்­டி­ருப்­ப­தா­கவும் பலர் பசி­யுடன் நித்­தி­ரைக்கு செல்­வ­தா­கவும் அறிக்­கைகள் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இதே­வேளை இலங்கை மக்­களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போது­மான உணவு கிடைப்­ப­தில்லை என வெளி­யான   சர்­வ­தேச அறிக்­கை­க­ளுக்கு ஜனா­தி­பதி அலு­வ­லகம் மறுப்பு தெரி­வித்­தி­ருக்­கி­றது.  உணவு பாது­காப்பு  தொடர்­பான மதிப்­பீட்டு அறிக்­கையில்,   சனத்­தொ­கையில்  17   சதவீத­மா­ன­வர்கள் அதா­வது 39 இலட்சம் பேர் உணவு பாது­காப்­பின்மை பிரச்­சி­னைக்கு ஆளா­கி­யுள்­ளனர் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் கடந்த வரு­டத்தின் ஜூன்/ஜூலை மாதங்­க­ளுடன் ஒப்­பிடும் போது, அந்த நிலைமை 40 வீதம் குறை­வ­டைந்­தி­ருப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி செய­லகம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

லேர்ன்­ ஏ­சி­யாவின் ஆய்வு

எப்­ப­டி­யி­ருப்­பினும்  லேர்ன்­ஏ­சியா   அமைப்பு   வறுமை தொடர்­பாக முன்­னெ­டுத்த ஆய்வு அறிக்­கை­யி­லுள்ள விட­யங்­க­ளையும் ஆரா­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

இந்த ஆய்­வின்­படி   31 சதவீத­மான வறு­மைக்­கோட்டின் கீழ் வாழ்­கின்ற மக்­களில் 51 சதவீத­மானோர் பெருந்­தோட்ட பகு­தியில் வாழ்­கின்ற மக்­க­ளாக இருக்­கின்­றனர்.   கிராமப் பகு­தி­களில் 32 சதவீத­மா­னோரும் நகர் பகு­தி­களில் 18 சதவீத­மா­னோரும்  வறுமை கோட்­டுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.    70 இலட்சம் வறு­மைக்­கோட்டின் கீழ் வாழ்­கின்ற மக்­களில் அரை­வாசிப் பேர்  அதா­வது 51 சதவீத­மானோர் பெருந்­தோட்ட பகு­தி­களில்  இருப்­ப­தாக  ஆய்வு கூறு­கின்­றது.

மேலும் தற்­போது காணப்­படும் சமூ­க­நல பாது­காப்பு திட்­டங்கள்  ஏழை மக்­களை  சென்­ற­டை­வதில் பல­வீ­ன­மான நிலைமை காணப்­ப­டு­வ­தாக ஆய்வு சுட்­டிக்­காட்­டு­கி­றது.   எனினும்  சமுர்த்தி போன்ற  உத­வி­களை பெறு­கின்­ற­வர்­களில் நான்கு வீத­மானோர் வசதி படைத்த குடும்­பங்­க­ளாக  இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறிருக்க இது தொடர்பில் அனு­ப­வத்தை பகிர்ந்­துள்ள இந்த ஆய்வு செயற்­பாட்டில் பங்­கெ­டுத்த லேர்ன்­ஏ­சியா நிறு­வ­னத்தின் கயனி ஹுருல்லே, இந்­த­ளவு குறு­கிய காலத்­துக்குள் மேலும் 4 மில்­லியன்  மக்கள் வறுமை நிலை­மைக்­குள்­ளா­கி­யுள்­ளமை கவ­லை­ய­ளிக்­கி­றது.    ஆரோக்­கி­ய­மான,  சரி­யான அளவில் குழந்­தை­க­ளுக்கு உண­வ­ளிக்க முடி­யா­ம­லுள்­ள­தாக நாம் சந்­தித்த பெற்­றோர்கள் தெரி­வித்­தனர்     என்று  குறிப்­பி­டு­கிறார்.  

சொத்­துக்­களை விற்கும் மக்கள்

கடந்­த­கா­லங்­களில் வறுமை நிலைமை கார­ண­மாக மக்கள் பல்­வேறு ரீதி­யான   தீர்­மா­னங்­களை எடுத்­தி­ருக்­கின்­றனர்.  70 மில்­லியன் மக்கள் வறு­மையின் கீழ் வாழ்­கின்ற நிலையில்  47 சதவீத­மானோர் உண­வு­களின் எண்­ணிக்­கையை குறைத்­தி­ருக்­கின்­றனர்.  அதே­போன்று 33 சதவீத­மானோர் குறை­வான உணவை உட்­கொள்­கின்­றனர். 27 சதவீத­மா­ன­வர்கள் (சிறு­வர்கள்)    பெரி­யோர்­களின் உணவைப் பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

நுவ­ரெ­லி­யாவை சேர்ந்த 37 வய­தான பெண் கருத்து வெளி­யி­டு­கையில்,

எனது கணவர் ஒரு சாதா­ரண தொழி­லாளி. அண்­மையில் ஒருநாள் எனது கணவர் வேலை­தேடி  அலைந்து மாலையில் குறைந்­த­ளவு பணத்­துடன் வீட்­டுக்கு வந்தார். அதில்  குழந்­தை­க­ளுக்கு சிறிது உணவை தயா­ரித்தேன்.  நான் பசி­யுடன் இருந்தேன்.  இவ்­வாறு எத்­த­னையோ நாட்கள் சாப்­பி­டாமல் பட்­டினி கிடந்­துள்ளேன்.  எனினும் நான் சாப்­பி­ட­வில்லை என்­பதை எனது குடும்­பத்­தா­ருக்கு வெளிப்­ப­டுத்தமாட்டேன் என்று மிகவும் சோக­மான தனது கதையை  கூறி­யி­ருந்தார்.

இதே­வேளை கடந்த காலங்­களில்  பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது சொத்­துக்­களை   விற்­பனை செய்தே  அன்­றாட உணவுத்தேவையை நிறை­வேற்றிக் கொண்­டனர். ஆய்வின் பிர­காரம் 37 சதவீத­மா­ன­வர்கள் தமது சொத்­துக்­களை விற்­பனை செய்­தி­ருக்­கின்­றனர்.  அதே­போன்று 50 சதவீத­மானோர்     சேமிப்பை உணவு தேவைக்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர்.  

இந்த ஆய்வின் பிர­காரம் 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலை­மை­யுடன் ஒப்­பி­டு­கையில்,  இலங்கை 2023ஆம் ஆண்டு பாரி­ய­ளவில் மோச­மான வறு­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது.    வட மாகா­ணத்தில் 2019 ஆம் ஆண்டு 28 சதவீத­மான வறுமை நிலை காணப்­பட்­டது.    தற்­போது 33 சதவீத­மாக அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.  வட மத்­திய மாகா­ணத்தில் 18 சதவீத­மாக  இருந்த வறுமை நிலை தற்­போது 31 சதவீத­மாக அதி­க­ரித்­துள்­ளது.   இவ்­வாறு சகல மாவட்­டங்­க­ளிலும் வறுமை அதி­க­ரித்­துள்­ளது.


நெருக்­க­டியின் ஆரம்பம்

2022 ஆம் ஆண்டு நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி தீவி­ர­ம­டைந்­தது.   டொலர் நெருக்­கடி ஏற்­பட்­டதன் கார­ண­மாக அத்­தி­யா­வ­சிய பொருட்­களை இறக்­கு­மதி செய்து கொள்ள முடி­யாத நிலை­யேற்­பட்­டது.   எரி­பொருள்,  எரி­வாயு,  அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்கள் போன்­ற­வற்றை இறக்­கு­மதி செய்ய முடி­ய­வில்லை.  மிகவும் குறைந்த அள­வி­லான எரி­பொருள், எரி­வாயு மற்றும் அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்­களே கூடிய விலைக்கு விற்­பனை செய்­யப்­பட்­டன.   எரி­பொருள், எரி­வாயு போன்­ற­வற்­றுக்கு மக்கள் நாட்­க­ணக்கில் கிலோ­மீற்றர் கணக்கில் வரி­சையில் நிற்க வேண்­டிய யுகம் ஏற்­பட்­டது.   உணவுப் பொருட்­களின் விலைகள் தீவி­ர­மாக அதி­க­ரித்­தன. வாழ்க்கைச் செலவு  தொடர்ந்து அதி­க­ரித்­தது.  பண­வீக்கம் 80 சதவீதத்தை தாண்­டி­யது.  

பொரு­ளா­தார  நெருக்­கடி கார­ண­மாக சிறிய மற்றும் நடுத்­தர வர்த்­த­கங்கள்    பாதிக்­கப்­பட்­டன.  இதனால் மக்கள் தொழில் வாய்ப்­பு­களை இழந்­தனர்.  சம்­ப­ளங்கள் குறைக்­கப்­பட்­டன. மக்­க­ளினால்   பெறு­கின்ற சம்­பளம் மற்றும்  அன்­றாட வரு­மா­னத்தைக் கொண்டு குடும்­பங்­களின் உணவுத் தேவையை நிறை­வேற்ற முடி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­டது.   மக்கள் தமது தேவை­களை குறைத்துக்கொண்­டனர்.       இரண்டு வேளை உணவு உண்ணும் நிலைமை ஏற்­பட்­டது.  யுனிசெப் அமைப்பின் 2022 ஆம் ஆண்டின் அறிக்கையின் பிர­காரம் பல குழந்­தைகள் இரவு நேரத்தில் பசி­யுடன் நித்­தி­ரைக்கு செல்­வ­தா­கவே அறிக்­கை­யி­டப்­பட்­டது.

மாண­வர்­களின் கல்வி பாதிப்பு

இந்­த­வ­கை­யி­லேயே  தற்­போ­தைய ஆய்வின் பிர­காரம் வறுமை நிலை அதி­க­ரித்­துள்­ளது.   மேலும் வறுமை நிலை­யா­னது மாண­வர்­களின் கல்­வியை பாதித்­துள்­ளது.   நாட்டில் ஆறு சதவீத­மான மக்கள் ஐந்து முதல் 18 வயது வரை­யான தமது குழந்­தை­களை பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­ப­வில்லை என்று இந்த ஆய்வு கூறு­கின்­றது.  முக்­கி­ய­மாக இலங்­கையில் குறைந்­த­பட்சம் 2 இலட்சம் மாண­வர்கள் பாட­சா­லை­க­ளுக்கு நெருக்­கடி காலப்­ப­கு­தியில் செல்­ல­வில்லை என்­பதை   ஆய்வு அறிக்கை தெரி­விக்­கி­றது.  சமூக பிர­தி­நிதி ஒருவர் இது குறித்து குறிப்­பி­டு­கையில்,  இங்கிருக்­கின்ற ஒரு தோட்­டத்தில் அரை­வா­சிக்கும் மேற்­பட்ட மாண­வர்கள் பாட­சா­லைக்கு செல்­வ­தில்லை. அவர்கள் பல தொழில்­களை தேடித் திரி­கின்­றனர். அவர்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை  உழைக்­கின்­றனர் என்­கிறார்.

நிவா­ரண திட்­டங்கள்

இதே­வேளை வறு­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்ள இந்த  ஏழு மில்­லியன்   மக்­களில் 2 மில்­லியன் குடும்­பங்கள் இருக்­கின்­றன.   எனினும்  தற்­போது காணப்­ப­டு­கின்ற சமூக பாது­காப்பு திட்­டங்கள்  வறுமை நிலையிலுள்­ள­வர்­களை சென்­ற­டை­வ­தில்லை என்ற  விட­யமும் ஆய்வில் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.  அர­சாங்கம் அஸ்­வெ­சும  நிவா­ரணத் திட்­டத்தை கடந்த வரு­டத்தின் இறுதிப் பகு­தியில்  அறி­வித்­த­துடன்  நிவா­ரணம் பெறு­வ­தற்­கான தகு­தி­யான மக்­களை தெரிவு செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தது.  அத­ன­டிப்­ப­டையில்   39 இலட்சம் மக்கள் விண்­ணப்­பங்­களை அனுப்­பி­யி­ருந்­தனர்.   அதில் தற்­போது 20இலட்சம் பேருக்கு நிவா­ரண உத­விகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

இலங்­கையில் கிட்­டத்­தட்ட 25 வகை­யான சமூக உதவி பாது­காப்பு திட்­டங்கள் காணப்­ப­டு­கின்­றன.  அதில் முக்­கி­ய­மாக சமுர்த்தி உதவி திட்டம்,    சிரேஷ்ட பிர­ஜை­க­ளுக்­கான  கொடுப்­ப­னவு  திட்டம், விசேட தேவை­யு­டை­யோ­ருக்­கான உதவி திட்டம், சிறு­நீ­ரக நோயா­ளர்­க­ளுக்­கான உதவி திட்டம் உள்­ளிட்­டவை காணப்­ப­டு­கின்­றன.    

மேலும் இலங்கை  கொரோனா வைரஸ் தொற்று பர­வ­லுக்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தியில் மொத்த தேசிய உற்­பத்­தியில் 0.4 சதவீத­மான  நிதி­யையே சமூக நிவா­ர­ணங்­க­ளுக்­காக செல­வ­ழித்­தி­ருக்­கி­றது.  அதா­வது  2019 ஆம் ஆண்டு இலங்­கையின் வறுமை சதவீதம் 14 ஆக   இருந்­த­போது நிவா­ர­ணத்­துக்­காக மொத்த தேசிய உற்­பத்­தியில் 0.4 சதவீத­மான நிதியே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.  ஆனால் 6.8 சதவீத­மான வறு­மையைக் கொண்ட வியட்நாமில் மொத்த தேசிய உற்­பத்­தியில் 1.6 சதவீத­மான நிதி வறு­மையை போக்க பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.   அதா­வது வறு­மையை போக்­கு­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களின் பங்­க­ளிப்பு இலங்­கையில் போது­மா­ன­தாக இல்லை என்­பதே ஆய்வில் புலப்­ப­டு­கின்­றது.

20 இலட்சம் பேருக்கு நிவா­ரணம்

அர­சாங்­கத்தின் அஸ்­வெ­சும திட்­டத்­தின்­படி நான்கு இலட்சம் பேர் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்­ப­னவை பெற தகு­தி­பெற்­றுள்­ளனர்.   மேலும் மிகவும் பாதிக்­கப்­பட்ட நான்கு இலட்சம் பேர் 5000 ரூபா மாதாந்த கொடுப்­ப­னவை பெற தகு­தி­பெற்­றுள்­ளனர். வறு­மையின் கீழ் வாழு­கின்ற எட்டு இலட்சம் பேர் 8,500   ரூபா  கொடுப்­ப­னவை பெற­வுள்­ளனர். மிகவும் கடு­மை­யான வறுமை நிலையில் இருக்­கின்ற நான்கு இலட்சம் பேர் 15,000 ருபா கொடுப்­ப­னவை மாதாந்தம் பெற­வுள்­ளனர். இவை ஒவ்­வொரு கால­கட்டம் வரை நீடிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக  15,000 ரூபா கொடுப்­ப­னவை பெறு­கின்­ற­வர்கள் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அந்த கொடுப்­ப­னவை மாதாந்தம் பெறு­வார்கள்.

மொத்­த­மாக 20 இலட்சம் பேர் நிவா­ரண உத­வி­களை பெறு­வ­தற்கு தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர்.   72,000 பேருக்கு விசேட  தேவை­யு­டையோ­ருக்­கான கொடுப்­ப­னவு கிடைக்­கின்­றது. சிறு­நீ­ரக நோயாளர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவான 5000 ரூபா    39 ஆயி­ரத்து 150 பேருக்கு கிடைக்­கின்­றது. சிரேஷ்ட பிர­ஜை­க­ளுக்­கான 2000 ரூபா கொடுப்­ப­னவு 4 லட்­சத்து 16 ஆயிரம் பேருக்கு கிடைக்­கின்­றது.  

இதே­வேளை சரி­யான விழிப்­பு­ணர்வு இல்­லா­ததன் கார­ண­மாக சிலர் இந்த அஸ்­வெ­சும  நிவா­ரணத் திட்­டத்­துக்கு விண்­ணப்­பிக்கவில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மாத்­த­றையை பகு­தியைச் சேர்ந்த   36 வய­தான ஒருவர் குறிப்­பி­டு­கையில், அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுள்ள திட்டம் என்றால் அது எமக்கு கிடைக்­காது என்­பது  நன்­றா­கவே தெரியும். அதனால் அது தொடர்­பாக நான் கவலை அடை­ய­வில்லை என்று குறிப்­பி­டு­கிறார்.

என்ன செய்ய வேண்டும்?

மேலும் லேர்ன்­ஏ­சியா நிறு­வ­னத்தின்  ஆய்வின் பிர­காரம்  பல பரிந்­து­ரைகள்  முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.  அதா­வது உட­ன­டி­யாக இந்த அஸ்­வெ­சும  திட்­டத்தை மீளாய்வு செய்து மீண்டும் மக்­க­ளுக்கு அவற்­றுக்கு விண்­ணப்­பிப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கொடுக்­கப்­பட வேண்டும்.   அத்­துடன்  வறுமை கோட்­டுக்கு இடையில் இருக்­கின்ற மக்­க­ளுக்­கான  தொடர்­பா­டல்கள் சரி­யான முறையில் இடம்பெற வேண்டும் என்றும் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை இந்த ஆய்வை மேற்­கொள்­வ­தற்­காக இலங்­கையில் 13 மாவட்­டங்­களில் 400 கிராம சேவகர் பிரி­வு­களில் கணக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இதற்­காக  10,000க்கும் மேற்­பட்ட மாதிரி குடும்­பங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.  

2019 ஆம் ஆண்டு 14  சதவீத­மாக இருந்த வறுமை   இன்று 31 சதவீத­மாக அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. ஆனால் இன்னும் அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வறு­மையை நிலையை அறி­விக்­க­வில்லை.  எனினும்  2022 ஆம் ஆண்டு இடம்­பெற்ற  பொரு­ளா­தார நெருக்­கடி வறுமை உயர மிக முக்­கிய காரணமாகும்.  அதாவது எரிபொருள் விலை உயர்ந்தமை, எரிபொருளுக்கான தட்டுப்பாடு   காரணமாக   உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, உற்பத்தி செலவு அதிகரித்தமை, தொழில்கள் இழக்கப்பட்டமை,  மக்களின்   சம்பளங்கள் குறைந்தமை, தொழில்துறை பலமிழந்தமை தொழிற்சாலைகள்   செயலிழந்தமை, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள்   கைவிடப்பட்டமை, பணவீக்கம் அதிகரித்தமை, வாழ்க்கைச் செலவு  உயர்வடைந்தமை போன்றன இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.   தற்போது இந்த வறுமை நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்.    முக்கியமாக பெருந்தோட்ட பகுதிகளில்  வறுமையை தாண்டவமாடுவதை    இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.  எனவே இது தொடர்பாக சரியான நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

பெருந்தோட்ட மக்களின் நிலை குறித்து கவனம் அவசியம்

பெருந்தோட்டப் பகுதிகளில் சகலருக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.   இது தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் உலக வங்கி மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். மேலும் தற்போது நிவாரண உதவிகள் அவசியமாகின்றன. ஆனால் நீண்டகாலத்தில் வறுமையை போக்குவதற்கான பொருளாதார அபிவிருத்தி வலுவூட்டல் திட்டங்கள் அவசியம்.  இந்த ஆய்வு அறிக்கைகளை தீர்மானம் எடுக்கின்ற நிலையில் இருக்கின்றவர்கள்   ஆராய்ந்து பார்ப்பது மிக அவசியமாகவே உள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன்...

2024-11-04 15:08:32
news-image

டிரம்ப் அல்லது ஹரிஸ்? யார் வென்றாலும்...

2024-11-04 13:32:38
news-image

" இரண்டாவது ட்ரம்ப் நிருவாகத்தை உலகம்...

2024-11-03 19:06:36
news-image

சிங்களமயமாக்கலுக்கு மெளனம்; தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு கூச்சல்!

2024-11-03 17:41:56
news-image

ஜோர்ஜியா – ஒரு நிறப் புரட்சியை...

2024-11-03 17:40:07
news-image

"சோரம்போகாத" வாக்காளர்கள் தேவை

2024-11-03 17:38:23
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024

2024-11-03 17:37:52
news-image

பிரித்தானிய அரசியல்வாதி ஜோர்ஜ் கால்லோவேவின் துணிச்சலான...

2024-11-03 17:36:58
news-image

சாபக்கேடான வேட்பாளர்கள்

2024-11-03 17:35:51
news-image

மறுக்கப்படும் பொறுப்புக்கூறல்!

2024-11-03 17:33:47
news-image

காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்!

2024-11-03 17:29:50
news-image

வடபகுதி மீனவா்களின் பிரச்சினைக்கு தீா்வு தராத...

2024-11-03 17:29:15