அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ரஞ்சன் கனேகம தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விடயம் தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இரு வைத்தியர்களுக்கிடையில் ஏற்பட்ட வார்த்தைப் பிரயோகத்தின் பின்னர் ஒரு வைத்தியர் மற்றைய வைத்தியரை தாக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த வைத்தியர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ரஞ்சன் கனேகம தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM