சிரிய யுத்தத்தில் அமெரிக்கா, ரஷ்யாவுடன் இணைந்து வான்வழி தாக்குதல்களை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு செய்திவெளியிட்டுள்ளது. 

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக சிரியாவில் ரஷ்யா அல்லது வேறு எந்த நாடுடனும் இணைந்து செயல் படுவதற்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிருவாகம் அறிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், "ஐ.எஸ் அமைப்பை அழிப்பதற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட எந்த நாட்டுடனும் இணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் வான்வழி தாக்குதலில், அமெரிக்கா இணைய இருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அமெரிக்க ராணுவத் தளமான பென்டகன் அக்கருத்தை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில்  குறித்த அறிக்கை வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.