12 கிலோ எடை கொண்ட 'சமோசா' சாப்பிடும் போட்டி

Published By: Digital Desk 3

20 Jun, 2023 | 10:55 AM
image

இந்தியாவில் 12 கிலோ எடை கொண்ட சமோசாவை 30 நிமிடங்களுக்கு சாப்பிட்டு முடித்தால் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இயங்கி வரும் இனிப்பகம் ஒன்றில் இந்த சமோசா போட்டி நடைபெறுகிறது. பரிசு தொகை 265510.40 ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ.71,000) வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பெரிய சமோசா ‘பாகுபலி சமோசா’ என அழைக்கப்படுகிறது. 

உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் பிரத்யேக மசாலா கொண்டு தேர்ந்த சமையல் கலைஞர் தயார் செய்யப்படும் இந்த சமோசா, சட்னியுடன் உணவுப் பிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த யோசனையை அந்த இனிப்பகத்தின் உரிமையாளர் ஷுபம் கௌஷல் முன்னெடுத்துள்ளார். 

தனது தொழிலை பிரபலம் செய்யும் வகையிலும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்கிலும் இதை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு தனது வாடிக்கையாளர்களுக்கு வேடிக்கை நிறைந்த சவாலாக இது இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இந்த சமோசா சாப்பிடும் சவாலில் யாரும் வெற்றி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வாடிக்கையாளர் ஒருவர் சுமார் 9 கிலோ சமோசாவை 25 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துள்ளாராம். நிச்சயம் இந்த சவாலில் யாரேனும் ஒரு வாடிக்கையாளர் வெற்றி பெறுவார் என தான் நம்புவதாக கௌஷல் தெரிவித்துள்ளார். அதுவரை இது தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பாகுபலி சமோசாவின் விலை 4113.54 (இந்திய மதிப்பில் ரூ.1,100) ரூபாவாகும். 

இதற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது. சிலர், தங்களால் முடியும் என ஆவலுடன் இந்த சமோசா சவாலில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும்...

2023-09-20 16:41:22
news-image

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

2023-09-14 21:12:17
news-image

நல்லூர் ஆலய மாம்பழ திருவிழாவில் 'குட்டி...

2023-09-11 17:26:24
news-image

குழந்தைகளுக்கு சந்திரயான், லூனா, விக்ரம், பிரக்யான்...

2023-08-28 15:31:00
news-image

பூக்களின் குணங்கள்

2023-08-15 13:02:20
news-image

இலங்கையில் முதன் முறையாக குஞ்சு பொரித்த...

2023-07-26 17:08:50
news-image

தோனிக்கும், தமிழ்மக்களுக்கும் மொழி ஒரு தடை...

2023-07-26 11:37:38
news-image

பிரியாணி சாப்பிடுவதில் சென்னைக்கு எந்த இடம்?...

2023-07-05 16:35:15
news-image

அட்லாண்டிக்கில் மூழ்கும் மர்மம்..! டைட்டானிக் முதல்...

2023-07-04 17:22:00
news-image

ஈ ஸ்கூட்டர் விற்பனை என இணையத்தில்...

2023-07-03 13:15:38
news-image

சீட்டிழுப்பில் பெருந்தொகை பணப்பரிசு : உயிருக்குப்...

2023-07-01 12:05:18
news-image

ஹை ஹீல்ஸுடன் 100 மீற்றர் ஓடுவதில்...

2023-06-29 16:42:14