அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்துங்கள் - பீரிஸ் சர்வதேசத்திடம் கோரிக்கை

Published By: Vishnu

19 Jun, 2023 | 09:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் உலக நாடுகள் விசேட கவனம் செலுத்தும். 

வங்குரோத்து நிலைக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பில் ஆராயுமாறு மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தவுள்ளோம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை புதன்கிழமை (21) பேரவையில் வாசிக்கப்படும். கடந்த காலங்களில் இடம்பெற்ற கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்கள் இன்றும் கருப்பு புள்ளியாக காணப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதித்துள்ளது.

வங்குரோத்து நிலையில் இருந்துக் கொண்டு ஜனநாயகத்துக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தவுள்ளோம்.நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கி தன்னிச்சையான முறையில் செயற்பட அரசாங்கம் சட்டங்களை உருவாக்க முயற்சிக்கிறது.

ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒளி,ஒலி பரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.ஒலி,ஒளி பரப்பு ஒழுங்குப்படுத்தல் ஒரு யோசனையே தவிர சட்டமூலம் அல்ல என்று அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

ஒலி,ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை என்பது ஒரு யோசனையல்ல அது சட்டமூலமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.ஆங்கில மொழியில் மாத்திரம் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.தமிழ்,சிங்கள ஆகிய மொழிகளின் மொழிபெயர்ப்பு வழங்கப்படவில்லை.இந்த வரைபின் 36 ஆவது உறுப்புரையில் ' இது ஒரு சட்டமூலம்' என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஒலி,ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக்...

2024-12-11 17:01:27
news-image

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் ...

2024-12-11 18:37:22
news-image

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக...

2024-12-11 17:31:13
news-image

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் தாய்...

2024-12-11 18:23:40
news-image

மோட்டார் சைக்கிள் - ஜீப் வாகனம்...

2024-12-11 18:03:42
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ...

2024-12-11 18:39:14
news-image

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான மக்கள்...

2024-12-11 17:36:54
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட...

2024-12-11 17:44:29
news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகள்...

2024-12-11 18:33:29
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2024-12-11 17:43:58
news-image

மஹர சிறையில் கொலை செய்யப்பட்ட கைதிகளுக்கு...

2024-12-11 17:41:01