அண்மைய ஆய்வின்படி ஆயிரம் நபர்களில் ஒருவருக்கு லிபோமா எனப்படும் கொழுப்பு கட்டி ஏற்படுகிறது. நாற்பது வயதுக்கு மேல் அறுபது வயதிற்குள் இருப்பவர்களில் ஆண், பெண் என பாலின பேதமின்றி இருவருக்கும் இத்தகைய லிபோமா எனப்படும் கொழுப்பு கட்டி உண்டாகிறது. இதற்கு தற்போது நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
லிபோமா என்பது எம்முடைய தோலின் அடிப்பகுதியில் வளரும் வட்ட வடிவிலான அல்லது ஓவல் வடிவிலான திசுக்களின் தொகுதியாகும். இந்த கட்டி முழுவதும் கொழுப்பாலானது.
இதனை நீங்கள் தொடும்போது அவை நகரும். பெரும்பாலும் வலியை ஏற்படுத்தாத இத்தகைய லிபோமாக்கள் எனப்படும் கொழுப்பு கட்டி, உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். பெரும்பாலும் முதுகு, கை, தோள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படுகிறது.
இத்தகைய லிபோமாக்கள் தீங்கு விளைவிக்காத மென்மையான திசு கட்டிகளாகும். இவற்றின் வளர்ச்சி என்பது மெதுவாகவே நடைபெறும். 95% க்கு மேல் இத்தகைய கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதில்லை. வெகு சிலருக்கு மட்டுமே... வேறு சில இணை பாதிப்புகளின் காரணமாக இவை புற்று நோயாக உருவெடுக்கின்றன.
மேலும் இத்தகைய லிபோமாக்களுக்கு சிகிச்சைகள் அவசியமில்லை. இதனால் ஏதேனும் வலி அல்லது அசௌகரிகம் ஏற்பட்டால்.., அதற்காக சிகிச்சை பெறலாம். Conventional Liploma, Fibroliploma, Spindle Cell Liploma, Angio Lipoma, Atypical Lipoma, Myelo Lipoma, Pleomorphic Lipoma என இத்தகைய கொழுப்பு கட்டிகள் பல உண்டு.
இத்தகைய கட்டிகள் தீங்கற்றவை என்பதால், இதற்குரிய சிகிச்சை அவசியமில்லை. ஆனால் இதன் காரணமாக வலிகள் ஏற்பட்டால் அல்லது அசாதாரண அசௌகரியம் ஏற்பட்டால், அதன்போது சத்திர சிகிச்சை செய்து இதற்கான முழுமையான நிவாரணத்தை பெறலாம்.
டொக்டர் தீப்தி,
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM