வவுனியாவில் இரண்டு தினங்களாக பெய்துவரும் கடும் மழையையடுத்து மக்கள் சந்தோசத்தில் உள்ளனர்.

வவுனியாவில் பெய்துவரும் கன மழையினால் மக்களுடைய இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மப்பும் மந்தாரமுமான காலநிலை நிலவுகின்றது.

இந்நிலையில் அங்கு குளிருடனான காலநிலை நீடித்துள்ளது. பாடசாலையில் மாணவர்களின் வருகையும் குறைந்து காணப்படுகின்றது.

வடக்கில் கடந்த சில மாதங்களாக பெரும் வரட்சி நீடித்திருந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 

வரட்சியால் மக்கள் மட்டுமல்லாது கால்நடைகள் மற்றும் விவசாயம், பயிர்ச்செய்கை குறிப்பாக நெற்செய்கை போன்றன பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தன.

இருந்தபோதிலும் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் அடை மழையையடுத்து அப் பகுதி மக்கள் பெரும் சந்தோசத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.