காஷ்மீரில் நாட்டுப்புற பாடல்களுடன் வயல்களில் நாற்று வேலைகள் ஆரம்பம்

Published By: Nanthini

19 Jun, 2023 | 01:17 PM
image

(ஏ.என்.ஐ)

காஷ்மீரில் விவசாயப் பருவம் தொடங்கும்போது, பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களின் இணக்கமான இசையுடன் வயல் நிலங்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. 

நெற்கன்றுகளை நடுவதன் மூலம் காஷ்மீர் உள்ளூர்வாசிகள் தங்கள் உழைப்புடன், நாட்டுப்புற பாடல்களை பாடும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை  வெளிப்படுத்துபவர்களாகவும் விளங்குகின்றனர். இது மக்களிடையே உள்ள ஆழமான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. 

காஷ்மீர் பெண்கள் தோட்ட பராமரிப்பு மற்றும் விவசாய செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும்போது, அவர்களின் குரல்கள் காற்றின் சலசலப்புடனும், பயிர்களின் மென்மையான அசைவுகளுடனும் கலந்து, பள்ளத்தாக்கில் எதிரொலிக்கும் ஒரு மயக்கும் சிம்பொனியை உருவாக்குகிறது.

விவசாயிகள் தங்கள் வயலை தயார் செய்து, நெல் கன்றுகளை நுணுக்கமாக நடும்போது, அவர்கள் தங்கள் விவசாய நடைமுறைகளில் நாட்டுப்புற பாடல்களை இணைத்து, தங்கள் முன்னோர்களின் கலாசார பாரம்பரியத்தை தழுவுகிறார்கள். 

நெல் நாற்றுகளை நடும் கடினமான பணி அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. 

பெண்கள், தங்கள் கைகளை மண்ணில் ஊன்றி, நாட்டுப்புற பாடல்களைப் பாடும் பழமையான நடைமுறையில் மூழ்கியிருக்கும் வேளைகளில் மன ஆறுதலையும் நிதானத்தையும் உத்வேகத்தையும் காண்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான்...

2026-09-09 17:29:09
news-image

மலேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து: வைத்தியர் உட்பட...

2026-09-09 14:34:06
news-image

“சிங்க நெபுலா”வின் புதிய தோற்றத்தை வெளியிட்டது...

2026-09-09 12:21:47
news-image

பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் கோளாறு:...

2026-09-09 12:22:31
news-image

பெண்ணின் வயிற்றிலிருந்து 13 பேனாக்கள், மெழுகுவர்த்தி...

2026-09-09 11:59:59
news-image

ரஷ்ய மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு ;...

2026-09-09 11:14:26
news-image

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா...

2026-09-09 11:16:36
news-image

வழமைக்கு திரும்பியுள்ளது ஈபிள் கோபுரம்

2026-09-09 10:55:22
news-image

நேபாளம் அருகே 5.3 ரிச்டர் அளவு...

2026-09-09 14:21:18
news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50