இலங்கை - சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க 19 வயதுக்குற்பட்டோர் அணிகள் மோதும் முக்கோணத்தொடரில் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 240 ஓட்டங்களால் சிம்பாப்வே அணியை வீழ்த்தியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் விஷ்வ சத்துரங்க ஜோடி முதல் விக்கட்டுக்காக 191 ஓட்டங்களை பகிர்ந்தது.

இதனடிப்படையில் அவிஷ்க பெர்னாண்டோ 108 ஓட்டங்களையும், விஷ்வ சத்துரங்க 103 ஓட்டங்களையும் விளாசினர்.

இந்நிலையில் 304 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 63 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களால் படு தோல்வியடைந்தது.