(எம்.நியூட்டன்)
'செய்தியாளர் - ஊடக தூதுமடல்' என்ற ஊடகத்துறை சார்ந்த சஞ்சிகை அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரால் சனிக்கிழமை (17) யாழில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வு யாழ்ப்பாணம் பெரிய தோட்டம் பீச் வீதியில் உள்ள பிசப் சவுந்தரம் மீடியா சென்ரரில் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் விரிவுரையாளர் கிருத்திகா தர்மராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், சிறப்பு விருந்தினராக வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, செபஸ்தியாம்பிள்ளை மைக்கல் தாசன் ஆசியுரை வழங்கியதோடு, முதல் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, ஊடகவியலாளராக இருந்து கலைப் பீடாதிபதியாக உயர்ந்துள்ள பேராசிரியர் ரகுராம் ஊடக விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
ஊடகத்துறை சார்ந்து யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே 80களில் 'பத்திரிகையாளன்' என்ற பெயரில் சஞ்சிகையொன்று வெளிவந்திருந்தது.
வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தினால் இந்த சஞ்சிகை வெளியிடப்பட்டது என்ற தகவலை 'ஊடக தூதுமடல்' சஞ்சிகையில் உள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, மூத்த ஊடகவியலாளர் ராதேயன் தொடர்பான ஒரு விரிவான கட்டுரை உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவிலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சம்பந்தப்பட்ட கட்டுரைகள் பலவும் இந்த சஞ்சிகையில் காணப்படுகின்றன.
இலங்கையில் குறிப்பாக, தமிழ் ஊடகத்துறையுடன் தொடர்புடைய தகவல்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயனுள்ள தகவல்களை தரும் ஒரு சஞ்சிகையாக இந்த மாதம் முதல் மாதந்தோறும் 'செய்தியாளர் - ஊடக தூதுமடல்' சஞ்சிகை வெளிவரும் என்று அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை இந்நிகழ்வில் தெரிவித்தார்.
இந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர் தினேஷ், மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன், பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM