பூஜையின்போது பெண் உயிரிழப்பு : லக்கல பொலிஸார் மேலதிக விசாரணை!

Published By: Digital Desk 3

19 Jun, 2023 | 11:36 AM
image

பூஜையின்போது திடீரென  சுகவீனமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  உயிரிழந்த சம்பவம்  லக்கல,  ஹத்தொட்டமுன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய  பெண்ணே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

லக்கல,   பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில்  சுகவீனமுற்றிருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் குணப்படுத்துவதற்காக இந்த  பூஜை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது  பூஜை செய்தவர் மூவருக்கும் தலா 21 இளநீர்களை அருந்த கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, இளநீரை  அருந்திய பெண்களில் ஒருவர்  திடீரென  சுகயீனமடைந்த நிலையில் அவருக்கு மஞ்சள் நீரை அருந்த கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, தாஸ்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில்...

2025-02-07 20:01:30
news-image

தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகள், பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய...

2025-02-07 20:24:36
news-image

இலங்கையின் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து...

2025-02-07 20:04:51
news-image

மாவை சேனாதிராஜாவின் வீட்டில் பொலிஸார் விசாரணை

2025-02-07 20:20:14
news-image

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க மின்சார சட்டத்தை...

2025-02-07 20:10:19
news-image

கடிதத்தில் பெயரிடப்பட்டிருப்பவர்கள் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள்...

2025-02-07 20:59:51
news-image

இன்றும் சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும்...

2025-02-07 19:49:30
news-image

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய...

2025-02-07 19:36:30
news-image

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும்...

2025-02-07 19:10:59
news-image

தொண்டமானின் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல்...

2025-02-07 18:38:51
news-image

மன்னார் புகையிரத நிலைய பிரதான வீதி...

2025-02-07 20:27:42
news-image

கொடதெனியாவையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-02-07 17:51:30