பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் அதிக எரிசக்தி இணைப்பை ஏற்படுத்துவதற்கான சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளித்துள்ளன.
இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முத்தரப்பு மின் வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவை இறுதி செய்துள்ளன. இது அண்டைய நாடுகளுக்கு அதிக எரிசக்தி இணைப்பை உருவாக்குவதற்கான டில்லியின் முயற்சிகளாகும்.
இதுபோன்ற முதல் ஒப்பந்தம், மூன்று நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டு, வரும் மாதங்களில் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நேபாளம் மற்றும் பங்களாதேஷின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
ஜூன் மாத தொடக்கத்தில் நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹால் டில்லிக்கு விஜயம் செய்தபோது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்தில் இருந்து பங்களாதே{க்கு நீர் மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கு இந்திய திட்டங்களை வெளியிட்டார். 50 மேகா வோட் மின்சாரம் ஆரம்ப உற்பத்தியாகவும், அதன் பின்னர் அதிகரிக்கவும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் மின்சாரப் பரிமாற்ற வலையமைப்புகள் மற்றும் பெட்ரோலியக் குழாய்கள் மூலம் அதிக எரிசக்தி இணைப்பை ஏற்படுத்துவதற்கான சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுடன் இந்த ஒப்பந்த நடவடிக்கை பொருந்துகிறது.
சீனாவின் மீது அண்டை நாடுகளின் சார்புநிலையைக் குறைப்பதும் ஒரு குறிப்பிடப்படாத நோக்கமாகுமாகவும் இது உள்ளது.
கடந்த காலங்களில் இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் அண்டை நாடுகளுடன் மின்சார வர்த்தகத்தில் இந்தியா கூடுதல் ஆர்வம் காட்டியது.
சமீபத்திய ஆண்டுகளில் மின்சாரத்தின் எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கான புதிய வழிகாட்டுதல்களின் இறுதி வடிவம் புதிய ஏற்பாடுகளுக்கான கட்டுமானத் தொகுதிகளாக செயல்பட்டன.
அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்த பிறகு உருவாக்கப்பட்ட திட்ட வழிகாட்டல்கள், அண்டை நாடுகளை இந் மின் பரிமாற்றங்களில் பங்கேற்கவும் அனுமதிக்கின்றன.
நேபாளம் போன்ற ஒரு நாட்டிற்கு மின்சாரத்தை ஒரு பிராந்தியத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு இந்தியா வழியாக அனுப்ப உதவுகிறது.
அண்டை நாட்டில் உள்ள எந்த சீன நிதியுதவி அனல்மின் நிலையத்திலிருந்தும் மின்சாரத்தை இந்திய இணைப்பு மூலம் வர்த்தகம் செய்ய முடியாத வகையில் திட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.
நேபாளம் மற்றும் பங்களாதேஷில் மின்சார பரிமாற்ற உள்கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு கூடுதலாக, இந்தியா இரு நாடுகளுடனும் எல்லை தாண்டிய குழாய்களை உருவாக்கவும் உதவியது.
தெற்காசியாவின் முதல் எல்லை தாண்டிய பெட்ரோலியக் குழாய், பீகாரில் உள்ள மோதிஹாரியை நேபாளத்தில் உள்ள அம்லெக்குஞ்ச் உடன் இணைக்கிறது. 324 கோடி ரூபா செலவில் இது கட்டப்பட்டது. 2019 இல் தொடங்கப்பட்டது இந்த திட்டத்தின் ஊடாக நேபாளத்திற்கு 2.8 மில்லியன் மெட்ரிக் டன் டீசலை வழங்கியுள்ளது.
மேலும் இந்த குழாயின் இரண்டாம் கட்டப் பணிக்கு இரு தரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனடிப்படையில், இந்தியாவிலிருந்து நேபாளத்தில் உள்ள ஜாப்பா என் பகுதியை இணைக்கும் இரண்டாவது குழாய் உருவாக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவும் பங்காளதேசமும் 377 கோடி ரூபா மதிப்பிலான எல்லை தாண்டிய பெட்ரோலிய குழாய் திட்டத்தை தொடங்கின.
இது அஸ்ஸாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அண்டை நாட்டின் வடக்குப் பகுதிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு மில்லியன் மெட்ரிக் டொன் டீசலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழாயின் நீளம் 132 கிமீ மற்றும் பங்களாதேசத்தில் 127 கிமீ நீளமாகும்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் போது, 4 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்தியாவின் ஆதரவின் ஒரு பகுதி, எரிபொருள் மற்றும் எரிவாயு கொழும்பின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் திட்டமாக காணப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கையில் எரிபொருள் நிரப்ப நிலையங்கள் செயலிழந்தபோது, இந்திய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் இந்தியா எரிபொருளை விநியோகித்தது. திருகோணமலையில் சீனாவின் செல்வாக்கு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையும் இந்தியாவும் கூட்டாக எண்ணெய் தாங்கி பண்ணைகளை அபிவிருத்தி செய்ய இணங்கியுள்ளன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM