சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் கடந்த திங்கட்கிழமை (12) போதைப்பொருள்களுடன் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை, சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களை தம் வசம் வைத்திருந்தபோது கைதானவர்களே செவ்வாய்க்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரகசியமாக கிடைத்த புலனாய்வு தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸார் கடந்த திங்கட்கிழமை இரவு மாறுவேடத்தில் சென்று முந்திரியடி வீதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் வைத்திருந்த ஒரு தொகை கஞ்சா, ஹெரோயின் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து, கைதானவர்கள் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் 19, 25, 19, 30 வயதுடையவர்களே கைதாகியுள்ளனர். அவர்களில் 19 வயது சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் வசமிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் கைத்தொலைபேசிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சாய்ந்தமருது பகுதியில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேட்டுச் சம்பவங்கள், சட்ட விரோத புறா வளர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இவை தொடர்பிலும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM