வவுனியாவில் வீதி ஓரங்களில் மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக வீதியோரங்களில் மின் விளக்கு இன்மையால் பொது மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர் நோக்கி வந்தனர்.

இந்நிலையில், வீதிகளில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பல மாதங்களாக செயற்படுவதில்லை என பொதுமக்கள் கவலை வெளியிட்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தனர்.

இதனையடுத்து, தற்போது வீதிகளில் மின் விளக்குப் பொருத்தும் நடவடிக்கையினை நகரசபை ஊழியர்களும், மின்சாரசபை ஊழியர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.