வவுனியாவில் காணாமற்போனோர்களின் உறவினர்களால் ஆரம்பமான சாகும்வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.  

மழை, குளிர் போன்ற காலநிலையினையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் காரணமாக உணவு தவிர்ப்பில் ஈடுபடுகின்றவர்களின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ளதுதை அவதானிக்க முடிகின்றது. 

இவர்களின் போராட்டம் மேலும் தொடருமானால் உடல் நிலை மோசமடைய வாய்ப்புக்கள் அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று உணவு தவிர்ப்பிற்கு ஆதரவாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் ஆதரவளித்து வருகின்றனர்.