பொலநறுவை ஹபரன பகுதியில், கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற கடற்படை அதிகாரி ஒருவரின் காரை பொலிஸார் துரத்தி பிடித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பொலநறுவை ஹபரன பகுதியில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கார் ஒன்று வந்து மோதியுள்ளது.
சம்பவத்தையடுத்து காரின் சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி முதலில் ஹபரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் தப்பிச் சென்ற காரின் சாரதி, விசேட பொலிஸாரின் உதவியுடன் பொலநறுவை மொரகஸ்வெவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கடற்படை அதிகாரி எனவும் அவர் குடிபோதையில் இருந்துள்ளதாகவும் தனது சொந்த வாகனத்திலேயே அவர் பயணித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM