இதய தமனி நோய் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Robert

25 Jan, 2017 | 10:37 AM
image

இதய தசைப் பகுதியில் ஏற்படும் நோய்களில் விரிந்த இதய தசை நோய், (Dilated Cardiomyopathy) ஹைபர் டிராபிக் இதய தசை நோய்,(Hyper Traffic Cardiomyopathy) கட்டுப்படுத்தப்பட்ட இதய தசை நோய் (Restrictive Cardiomyopathy) என மூன்று வகையிருக்கிறது.  

இதில் பெரும்பாலானவர்களுக்கு விரிந்த இதய தசை நோய் தான் காணப்படுகிறது. இதனால் இதய தசை முழுவதும் வலிவிழந்து குறைவாக இரத்தம் அனுப்பப்படுகிறது. ,இவ்வகையான பிரச்சினை பெண்களை விட ஆண்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது. எல்லா வயதைச் சார்ந்தவர்களுக்கு இது ஏற்படும் என்றாலும் முப்பது முதல் ஐம்பது வயதிற்குள் இருக்கும் ஆண்களுக்கு இவை அதிகளவில் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் இதய தமனி நோய் தாக்குகிறது. இந்நோய் வைரஸ் தொற்றால் உண்டாகிறது என்று அண்மையில் கண்டறிந்திருக்கிறார்கள். ஜலதோஷம் அல்லது ஃபுளூ காய்ச்சலாகத் தொடங்கி இந்நோயாக மாறக்கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னரே கடுமையான இதய நோயாக மாறுகிறது.குடிப்பழக்கம், விடம் அருந்தியிருத்தல், சத்துக்குறைபாடு, ஹோர்மோன் கோளாறு, உயர் இரத்த அழுத்தம், பரம்பரை ஆகிய காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து ஒவ்வொருவிதத்திலான சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது, குறிப்பாக வாழ்க்கை முறையை மாற்றியமைத்துககொள்ளும் படி அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறார்கள். முதலில் உங்களின் செயல்கள் அதாவது நடவடிக்கைகள், பணிகள் ஆகியவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்படும். ஓய்வு எடுப்பது கட்டாயமாக்கப்படும். தலையை உயர்வாக வைத்து ஓய்வெடுப்பது நன்மைத் தரும். சைக்கிளிங் செய்யச் சொல்வார்கள். இதனால் தலைசுற்றல் கட்டுப்படும். அதிகமாக நிற்பதையும், அதிகமாக உட்கார்ந்திருப்பதையும் முற்றாக தவிர்த்துவிடுங்கள்.

உணர்வு சிக்கலும், உடல் சிரமமும் உங்கள் இதயத்திற்கு அதிக சிரமங்களை தருகின்றன. அதனால் இதனை கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவரின் ஆலோசனைகளை உறுதியாக பின்பற்றுங்கள். அதிகமாக  உண்ட பிறகு குமட்டல், அழுத்தம் ஏற்பட்டால் உணவை குறைத்துக்கொள்ளுங்கள். ஆனால் மூன்று வேளை என்பதை ஆறு வேளையாக பிரித்து சாப்பிடத் தொடங்குகள். அதே தருணத்தில் வயிற்றில் நீர் சேர்ந்திருந்தாலும் குமட்டலும், அழுத்தமும் தோன்றக்கூடும். அதனால் அதை மருத்துவரிடம் சென்று காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள.  இதய தசை நோயை அலட்சியப்படுத்தினால் இரத்தம் கட்டியாகிவிடக்கூடிய அபாயம் உண்டு. இவ்வகை கட்டியால் கல்லீரல், கால், மூளை போன்ற பகுதிகள் பாதிக்கப்படக்கூடும். இதனால் இதயம் செயலிழந்து போகும் அபாயமும் ஏற்படும். எனவே இரத்தம் கட்டியாவதை தடுக்க முன்கூட்டியே மருத்துவரிடம் சென்று காண்பித்து சிகிச்சைப் பெற்றுக்கொண்டு நலமுடன் வாழுங்கள்.

டொக்டர் ஆனந்தன் M.S.,

தொகுப்பு  அனுஷா.  

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04