புற்றுநோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை- இன்ட்ராஒபரேடிவ் ரேடியேசன் தெரபி

Published By: Ponmalar

16 Jun, 2023 | 04:26 PM
image

மருத்துவ தொழில்நுட்பங்கள் மேம்பட்டு வருகிறது. கடந்த தசாப்தங்களை விட புற்றுநோயை குணப்படுத்துவதில் பல நவீன சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழலில் எத்தகைய புற்று நோயாக இருந்தாலும்... அதனை சிகிச்சை அளிப்பதற்காக மூன்று வகையினதான சிகிச்சை முறை வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

சத்திர சிகிச்சை முறை, கீமோதெரபி பாணியிலான மருந்தியல் சிகிச்சை முறை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறை என மூன்று சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்ட்ரா ஒபரேட்டிவ் ரேடியேஷன் சிகிச்சை முறை எனும் புதிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உண்டாகும் இரைப்பை புற்றுநோய், குடல் புற்றுநோய், ஆசனவாய் புற்றுநோய் என பல புற்று நோய்கள் பாதிப்புகளுக்கு தற்போது இன்ட்ரா ஒபரேட்டிவ் ரேடியேஷன் சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சிகிச்சை முறையின்போது சத்திர சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டியை அகற்றும் அதே தருணத்திலேயே கதிர்வீச்சு சிகிச்சையையும் அளிக்கிறார்கள்.

இத்தகைய சிகிச்சை அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்புகள் வருவதற்கான சாத்தியக்கூறு குறைக்கப்படுகிறது.

மேலும் சத்திர சிகிச்சையின் போது கண்களுக்கு அகப்படாத புற்றுநோய் கட்டிகளும்... கதிர்வீச்சு சிகிச்சையின் போது அழிக்கப்படுவதால், புற்றுநோயிற்கான முழுமையான நிவாரண சிகிச்சை உறுதி செய்யப்படுகிறது.

மேலும் இத்தகைய சிகிச்சையின் போது புற்றுநோய் கட்டிகள் சத்திர சிகிச்சை செய்து அகற்றிய பிறகு, ஆரோக்கியமான பகுதிகளில் குறைவான பாதிப்பு ஏற்படும் வகையில் கதிர்வீச்சு சிகிச்சை அமைக்கப்பட்டு அளிக்கப்படுகிறது.

மேலும் இதன் போது வழங்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை நிலையானதாகவும், சிலருக்கு சத்திர சிகிச்சைக்கு முன்பாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

டொக்டர் வைத்தீஸ்வரன்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் மீண்டும் காதில் ஏற்படும் தொற்று...

2026-02-17 17:46:30
news-image

கொழுப்பு கல்லீரல் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும்...

2026-02-16 18:28:38
news-image

சமச்சீரற்ற காது அமைப்பினை சீராக்கும் நவீன...

2026-02-14 15:29:28
news-image

மூட்டு வலியை நீக்கும் நவீன சிகிச்சை

2026-02-13 15:53:59
news-image

இதய செயலிழப்பை ஏற்படுத்தும் பொலிசித்தீமியா..!?

2026-02-12 14:42:46
news-image

ஒவ்வாமையினால் ஏற்படும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-02-11 17:03:30
news-image

கேண்டிடியாசிஸ் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

2026-02-10 15:00:08
news-image

ஓட்டோஸ்கிளிரோசிஸ் எனும் கேட்கும் திறன் பாதிப்பிற்குரிய...

2026-02-09 18:19:16
news-image

சுப்பீரியர் வேனா காவா சிண்ட்ரோம் எனும்...

2026-02-07 15:10:23
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-02-06 17:07:16
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் நவீன சிகிச்சை

2026-02-05 15:27:13
news-image

கோசிடினியா எனும் வால் எலும்பு வலி...

2026-02-04 15:21:40