அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கத்தினால் கையொப்பம் இடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்துவருகின்ற புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதாமான திருத்தங்களில் நாளை (ஜிஎம்டி நேரம்ப்படி) முக்கியமான சட்ட மூலம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளதாக  அதிரடியாக அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பினை டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் குறிப்பாக முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளுக்கான ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வீசா வழங்கல் கட்டுப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அகதிகள் வருகையினை குறைப்பதற்கு எல்லை கட்டுப்பாட்டுகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொனால்ட் ட்ரம்பின் தேர்தல்கால பிரசாரங்களின் போது குடிவரவு குடியகழ்வு சட்டங்கள் தொடர்பான வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.