(எம்.வை.எம்.சியாம்)
அரசியல்வாதிகள் போன்று தேவையற்ற பிரச்சினைகளை எம்மால் தோற்றுவிக்க முடியும். இருப்பினும் நாட்டில் தீர்வு காண வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அனைவரும் ஒரே இனமாக இலங்கையர்கள் என்ற வகையில் செயற்படவேண்டும். அதற்கு முன்னர் நாட்டை அரசியல்வாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
வழக்கொன்றில் ஆஜராவதற்காக கொழும்பு, உயர் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை (16) வருகை தந்த போதே தேரர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாம் பொறுமையாக இருப்பவர்கள். நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கி மேலும் படுகுழிக்கு இட்டுச் செல்ல வேண்டாம். அனைவரும் ஒரே இனமாக இலங்கையர்கள் என்ற வகையில் செயல்பட வேண்டும். நாம் எதற்கும் தயார்.
நாடு பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் துன்பத்திலுள்ள நிலையில் பொறுமையாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது எமது பொறுப்பாகும்.
அரசியல்வாதிகள் போன்று தேவையற்ற பிரச்சினைகளை எம்மால் தோற்றுவிக்க முடியும். நாட்டில் தீர்வு காண வேண்டிய பிரச்சினைகள் பல காணப்படுகின்றன. விசேடமாக பொருளாதார பிரச்சினைகள் காணப்படுகின்றன.
தேசிய வளங்கள் விற்பனைக்கு எதிராக நான் பல தடவைகள் வழக்கு தொடந்துள்ளேன். நிலவளம், வனவளம், நீர்வளம் மற்றும் யானை வளம் என அனைத்து வளங்களும் நிறைந்ததாக எமது நாடு காணப்படுகிறது.
இருப்பினும் தற்போதுள்ள நாட்டின் அரசியல் வளம் அருவருப்பாக உள்ளது. அரசியல் சொத்துகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இடம்பெறவில்லை.
சொத்து என்பது தூய்மையானது. எனினும் எமது நாட்டை இன்று அரசியல்வாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM