இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து 'ஆதிபுருஷ்' திரைப்படம் தயாராகியுள்ளது.
இதில் இராமராக பிரபாஸ், இராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.
பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு திருப்பதியில் கடந்த ஜூன் 6 ஆம் திகதி நடைபெற்றது. இதில் படத்தின் புதிய ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் ஓம் ராவத், ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் நான் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆதிபுருஷ் படம் வெளியாகும் திரையரங்கில் அனுமனுக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ள புகைப்படம் நேற்று வியாழக்கிழமை இணையத்தில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்று (ஜுன் 16) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான 'ஆதிபுருஷ்' படத்தின் காட்சியின்போது திடீரென ஐதராபாத்திலுள்ள திரையரங்கிற்குள் குரங்கு நுழைந்ததாக தெரிகிறது.
குரங்கை கண்ட ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் பாடலை பாடி ஆரவாரம் செய்துள்ளதோடு, வீடியோ எடுத்துள்ளனர்.
டுவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்த நபர் அனுமன் ஜி ஆதிபுருஷ் படத்தை பார்க்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM