சீனாவின் பெய்ஜிங் நகரில் நேற்று (15) நடைபெற்ற சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியொன்றில் அவுஸ்திரேலிய அணியை ஆர்ஜென்டீன அணி 2:0 கோல்கள் விகிதத்தில் வென்றது.
ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி இப்போட்டி ஆரம்பித்து 79 விநாடிகளில் கோல் புகுத்தினார். இது தனது கால்பந்தாட்ட வாழ்க்கையில் மெஸி புகுத்திய மிக விரைவான கோல் ஆகும்.
இடைவேளையின்போது ஆர்ஜென்டீன அணி 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
68 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீன வீரர் ஜேர்மன் பெலேலா இரண்டாவது கோலைப் புகுத்தினார்.
கடந்த உலகக்கிண்ணத் தொடரின் 2 ஆவது சுற்று ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை 2:1 விகிதத்தில் ஆர்ஜென்டீன வென்றிருந்தது. அதன் பின்னர் இவ்விரு அணிகளும் இவ்விரு அணிகளும் நேற்று முதல் தடவையாக மோதின.
இப்போட்டியை 50,000 இற்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் பார்வையிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆர்ஜென்டீனாவின் சீருடை போன்ற ரீஷேர்ட்டுகளை, விசேடமாக, மெஸியின் பெயர் பொறிக்கப்பட்ட ரீஷேர்ட்களை அணிந்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM