வவுனியாவில் டிப்பர் மோதி விபத்து ; தாயும் மகளும் பலி!

Published By: Digital Desk 3

16 Jun, 2023 | 10:34 AM
image

வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16)  டிப்பர் வாகனம் ஒன்று மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்றைய தினம் காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக  குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது.

விபத்தில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்றொரு சிறுவன் டிப்பர் வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே உயிரிழந்தனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற போது டிப்பர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர். விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள்  துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

இதேவேளை, விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை சராமரியாக தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டனர். 

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. 

சம்பவஇடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41