(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்புக்கு அமைய அமைச்சரவையை குறித்து அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு அரசமுறை பயணத்தை நிறைவு செய்ததன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபிக்க பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். அமைச்சு பதவி இல்லாத காரணத்தால் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்திடைந்துள்ளமை நியாயமானதே,
அரசியலமைப்புக்கு அமைய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.ஜனாதிபதியின் வெளிநாட்டு அரசமுறை பயணம் நிறைவு பெற்றதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படாம்.சகல தரப்பினரது ஒத்துழைப்புடன் மாத்திரமே அரச நிர்வாகத்தை முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
பொதுஜன பெரமுன அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தற்போது செயற்படவில்லை.தேர்தல் ஒன்றுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தி அரசியல் தீர்மானங்களை எடுப்போம்.
ஊடகங்களை கண்காணிக்கும் வகையில் சட்டமூலம் கொண்டு வருவது அத்தியாவசியமானது.பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் முகவராக செயற்படுகின்றன.நாட்டில் முறையான ஊடக கலாசாரம் பின்பற்றப்பட வேண்டுமாயின் ஊடகங்களின் செயற்பாடு கண்காணிக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM