முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடித்து வரும் 'மாவீரன்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'வண்ணாரப்பேட்டையிலே..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடருடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.
'மண்டேலா' எனும் படத்தை இயக்கி தேசிய விருதினை வென்ற இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'மாவீரன்'.
இதில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'வண்ணாரப்பேட்டையிலே..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
பாடலாசிரியர் யுகபாரதி எழுதியிருக்கும் இந்த பாடலை நடிகரும், பின்னணி பாடகருமான சிவகார்த்திகேயனும், நடிகையும், பின்னணி பாடகியுமான அதிதி ஷங்கரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசை பாணியில் அமைந்திருக்கும் இந்த பாடல் இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM