இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பலர் அளித்த பாலியல் தொந்தரவு முறைப்பாடுகள் தொடர்பில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக டெல்லி பொலிஸார் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரம் தாக்கல செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு சிறுமி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தான் பிரிட்ஜ் பூஷன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் முதல் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், தற்போது பிரிஜ் பூஷண் மீது சிறுமி அளித்த பாலியல் முறைப்பாட்டுக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் டெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், சிறுமியின் முறைப்பாட்டின் அடிப்படையில் பதிவு செய்த போக்சோ வழக்கை ரத்துச் செய்யக் கோரி 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையொன்றையும் டெல்லி பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.
பாஜக பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த வீரர், வீராங்னைகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வந்தனர்.
இவ்விடயம் தொடர்பல் தான் நடவடிக்கை மேற்கொள்வதா இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று 15 ஆமு; திகதி வரை போராட்டத்தை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM