கணவரால் தாக்கப்பட்டு ஹட்டனைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு : வென்னப்புவவில் சம்பவம்!

Published By: Vishnu

15 Jun, 2023 | 12:00 PM
image

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வைக்கால் பிரதேசத்தில்  உள்ள பேக்கரி பொருட்கள்  உற்பத்தி நிறுவனம் ஒன்றில்  பணிபுரிந்த  பெண்ணொருவர் கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கிப்  கொலை செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை (14) அதிகாலை 2.00 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் வட்டவளை பிரதேசத்தில் வசித்து வந்த சத்தியவேலு நதிகா என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருமணத்தின் பின்னர் கணவருடன் ஹட்டன் வட்டவளை பகுதியில் வசித்து வந்துள்ளார். கணவருடன் வாழ முடியாது என்று கூறி, இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பேக்கரி பொருட்கள்  தயாரிப்பு நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன்பிறகு கணவன் பலமுறை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வருமாறு கூறியும் தன்னுடன் வாழ முடியாது எனக் கூறி மறுத்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு பல தடவைகள் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்கு  முந்தைய நாள் இரவிலிருந்தே பெண்ணின் கணவர் குறித்த  பேக்கரி அருகே தங்கியிருந்துள்ளார். அதிகாலை, 2:00 மணியளவில், பேக்கரிக்கு தேவையான வேலைகளைச் செய்வதற்காக அவரது மனைவி சென்றபோது மறைந்திருந்த கணவர், அவரை மார்புப் பகுதி மற்றும் தலைப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை...

2024-03-03 14:46:29
news-image

யாழில் நடுக்கடலில் கறுப்புக்கொடி ஏந்தி கடற்றொழிலாளர்கள்...

2024-03-03 14:48:37
news-image

காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் ஒருவர்...

2024-03-03 16:12:19
news-image

நாளை மறுதினம் நாடு திரும்பும் பசில்...

2024-03-03 13:52:03
news-image

அனுமதிப்பத்திரமின்றி ட்ரோன் கெமரா மூலம் வீடியோ...

2024-03-03 13:32:47