ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான முகைதீன் பாவா சித்தியா எனும் பெண் பஸ் வண்டியில் தனது ஊருக்கு செல்வதற்கு பாதசாரி கடவையை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் போதையுடன் காணப்பட்டதோடு, காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM