டெலிகொம் மனித ஆற்றல் ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

குறித்த  இந்த பேரணியை கொழும்பு - கோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது கொள்ளுப்பிட்டி பகுதிக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பேரணி லேக்கவுஸ் சுற்றுவட்டப் பாதையூடாக, கெம்பனித்தெருவுக்கு சென்று அதன் ஊடாக அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்து தமது சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளவுள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன நெரிசல் காரணமாக மக்கள அவதியுற்றுள்ளதுடன், வாகன சாரதிகளை மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.