நெட்பிலிக்ஸ் தொடரை தொடர்ந்து தாய்வானை அதிரவைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் - அரசியல்வாதிகள் மருத்துவர்கள் பேராசிரியர்கள் உட்பட பலரின் மீதுபெண்கள் பகிரங்க குற்றச்சாட்டு

Published By: Rajeeban

15 Jun, 2023 | 11:27 AM
image

தாய்வானில் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளால் பெரும் சர்ச்சைகள் மூண்டுள்ளன.

நெட்பிளி;க்ஸ் தொடரை தொடர்ந்து தாய்வானில் மீடு இயக்கம் தீவிரமடைந்துள்ளது.

கடந்தவாரங்களில் சுமார் 90 பேர் தாங்கள் எதிர்கொண்ட  பாலியல்துன்புறுத்தல் மற்றும் பாலியல்வன்முறை குற்றச்சாட்டுகள் குறித்து பகிரங்கமாக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தாய்வானின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியின் அரசியல்வாதிகளிற்கு எதிராகவே முதலில் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.இதனை தொடர்ந்து கட்சியின் பலபிரமுகர்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

எனினும்தற்போது தாய்வான் சமூகத்தின் பல்வேறுதரப்பட்டவர்களிற்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.மருத்துவர்கள் விளையாட்டு வீரர்கள் பேராசிரியர்கள் விளையாட்டுப்போட்டிகளின் நடுவர்கள் என பலருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

போலந்து இராஜதந்திரியொருவர் மீது புத்திஜீவிகள் அமைப்பு பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

முற்போக்கான அரசியல் மற்றும் பாலினசமத்துவத்திற்கான அர்ப்பணிப்பு போன்றவற்றிற்காக தாய்வான் சர்வதேச அளவில் பாராட்டப்படும் சூழ்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

தாய்வானின் முதல் பெண்ஜனாதிபதியான சாய் லிங்வென் இநத தவறுகளிற்காக மன்னிப்பு கோரியுள்ளதுடன் சீர்திருத்தங்களை முன்னெடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளார்.

முன்னர் பாலியல் துன்புறுத்தல் குறித்த ஒரிரு குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன இவ்வளவு பாரிய அளவில் குற்றச்சாட்டுகள் வெளியாகவில்லைஎன சமூக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு தொழில்களில் உள்ள அடிப்படை சிக்கல்கள் வெளியாவது இதுவே முதல் தடவை என அவர் தெரிவித்துள்ளார்.

தாய்வானின் மிகவும் பிரபலமான சூழல் ஆர்வலரான தனது மேலதிகாரியினால் தான்பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளானதாக பிபிசிக்கு தெரிவித்துள்ள பெண்ணொருவர் நீதிகோருவதற்கான உத்வேகம் தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நான் கடந்தவருடம் நியாயம் கோரமுற்பட்டவேளை  அது மறுக்கப்பட்டது நிராகரி;க்கப்பட்டது எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கடந்த வாரம் அவர் இணையம் மூலம் கருத்து தெரிவி;த்தவேளை அவர் தொழில்புரியும் இடத்திலிருந்து மன்னிப்பு கோரப்பட்டது அவரது பெண் மேலதிகாரியும் மன்னிப்பு கோரினார். பின்னர் மேலதிகாரி தனதுபதவியை இராஜினாமா செய்தார்.

அதேவேளை பல பெண்கள் அவருக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

காரணமாக அமைந்த நெட்பிலிக்ஸ் தொடர்

கடந்த ஏப்பிரல் மாதம் முதல்குற்றச்சாட்டுகள் வெளியானவேளை அதற்கு காரணமாக அமைந்ததுஉள்நாட்டு தொலைக்காட்சி தொடர் என கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

தாய்வானின் அரசியல் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவது தொடர்பானதே அந்த நெட்பிளிக்ஸ் தொடர்.

இளம் பெண் உதவியாளர் ஒருவர்தொடரின் முக்கிய கதாபாத்திரமான கட்சியின் பேச்சாளருடன் தனியாக காணப்படும் காட்சிகள் அந்த நெட்பிலிக்ஸ் தொடரில் காணப்படுகின்றன.

ஆண் சகாவொருவர் தன்னை துன்புறுத்தியதை அவர் பகிரங்கப்படுத்த துணிந்தாரா? தேர்தல் வேளையில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்திருந்தும் அதனை பகிரங்கப்படுத்த துணிந்தாரா?

அவர் உண்மையை தெரிவிக்க தீர்மானித்தார் இன்னுமொரு பெண்ஒருவர் அதனை செவிமடுத்தார் உதவ முன்வந்தார்.இந்தசந்தர்ப்பத்தை நாங்கள் நழுவவிடக்கூடாது அந்த பெண் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தெரிவிக்கின்றார்.

தாய்வானின் உணர்வுகளை தூண்டிவிட்ட காட்சி இது என தெரிவிக்கப்படுகின்றது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேருந்து நிலைய பயணிகள் மீது காரால்...

2025-03-24 16:03:22
news-image

சென்னையில்பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு...

2025-03-24 15:46:45
news-image

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தெரிவு...

2025-03-24 14:39:33
news-image

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக...

2025-03-24 13:15:46
news-image

சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு தூதரகம் மூலம்...

2025-03-24 12:42:36
news-image

டிரம்பின் முன்னாள் மருமகளுடன் உறவு -...

2025-03-24 11:31:32
news-image

இந்தியாவில் 150 அடி உயர தேர்...

2025-03-23 16:33:09
news-image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு...

2025-03-23 13:29:51
news-image

அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின்...

2025-03-23 11:30:32
news-image

தென் கொரியாவில் காட்டுத்தீ : 4...

2025-03-23 11:17:11
news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24