(நா.தனுஜா)
விவசாய அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்படும் சிறியளவிலான விவசாய - வர்த்தக முயற்சியாண்மை பங்கேற்பு செயற்திட்டத்தின் ஊடாக அடுத்துவரும் பெரும்போக விளைச்சல் காலப்பகுதியில் 16,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளப்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு அவசியமான உதவிகள் வழங்கப்படுமென விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் ஷெரினா தபஸ்ஸம் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்கிழமை (13) நடைபெற்றது. இச்சந்திப்பின்போது சிறியளவிலான விவசாய - வர்த்தக முயற்சியாண்மை பங்கேற்பு செயற்திட்டம் உள்ளடங்கலாக விவசாயத்துறையின் மீட்சியை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவருகின்ற செயற்திட்டங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி விவசாய - வர்த்தக முயற்சியாண்மை பங்கேற்பு செயற்திட்டத்தின்கீழ் சோளப்பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் அடுத்துவரும் பெரும்போக விளைச்சல் காலப்பகுதியை இலக்குவைத்து அநுராதபுரம், அம்பாந்தோட்டை, மொணராகலை, பொலனறுவை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 16,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலப்பரப்பில் சோளப்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு அவசியமான தரமான விதைகள், இரசாயன உரம், நிலத்தைப் பதப்படுத்தும் வசதிகள் மற்றும் நிதியுதவிகள் என்பன விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
மேற்கூறப்பட்ட செயற்திட்டத்துக்கு அவசியமான உதவிகள் தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை வழங்கத் தயாராக இருப்பதாக விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் அதிகாரி ஷெரினா தபஸ்ஸம் உறுதியளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM