மூளைச்சாவடைந்து இறப்போரின் சிறுநீரகங்களை தானமாக வழங்க உறவினர்கள் முன் வர வேண்டும் – சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை

Published By: Vishnu

14 Jun, 2023 | 08:51 PM
image

மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை விடுத்தார்.

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம் பெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், திடீரென ஏற்படும் விபத்து மற்றும் சில நோய் காரணமாக மூளை சாவடைந்து இறந்தவர்களின் இதயம் சில மணி நேரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களது சிறுநீரகத்தினை அறுவைச் சிகிச்சை மூலமாக தேவைப்படும் ஒருவருக்கு பொருத்த முடியும்.

அவ்வாறு சிறுநீரகம் தேவைப்படுகின்ற ஒருவருக்கு பொருத்துவதற்கு மூளை சாவடைந்து இறந்தவரின் உறவினர்கள் முன் வந்தால் இன்னொரு உயிரை காப்பாற்றும் சந்தர்ப்பம் ஏற்படும். எனவே அவ்வாறு சிறுநீரகத்தை தானம் தருவதற்கு பொதுமக்கள் முன் வர வேண்டும் என இதன்போது கேட்டுக் கொண்டார்.

கடந்த காலங்களில் சிறுநீரகம் செயலிழந்த ஒருவருக்கு சிறுநீரகத்தை பொருத்துவதற்காக கண்டி வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் சிலர் சிறுநீரகத்தை பெற்று தருவதற்கான உதவியினை வழங்கியிருக்கிறார்கள்.

தற்போது யாழ்ப்பாணத்தில் நோய்காரணமாக சிறுநீரகத்தை இழந்தவர்களுக்கு சிறுநீரகத்தினைப் பொருத்துவதற்கு மூளை சாவடைந்து இறந்தவர்களின் உறவினர்கள் முன் வந்து வழங்கினால் அவர்கள் எப்பொழுதும் நன்றிக்குரியவர்களாகவும், பிறிதொரு உயிரை வாழ வைக்கும் உயர்ந்த பாக்கியத்தினை பெற்றவர்களாகவும் காணப்படுவர்.

எனவே இது தொடர்பான விழிப்புணர்வு பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் ஏனைய பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி பிற உயிரை வாழ வைக்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த முன்வர வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியமின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் என்று...

2024-06-15 18:12:22
news-image

தேர்தல் கால பிரச்சாரமாக 13ஆவது திருத்தத்தை...

2024-06-15 18:29:03
news-image

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும்...

2024-06-15 16:55:52
news-image

ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்...

2024-06-15 16:39:31
news-image

கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு ஆளுநரால் புதிய...

2024-06-15 16:56:44
news-image

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 மாணவர்களின்...

2024-06-15 15:11:12
news-image

தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப்...

2024-06-15 15:43:02
news-image

அடுத்த வாரம் இலங்கை வருகிறார் இந்திய...

2024-06-15 15:18:37
news-image

10 ஆவது சர்வதேச யோகா தினத்தை...

2024-06-15 14:41:09
news-image

கண்டியில் சக மாணவனை கத்தியால் குத்திய...

2024-06-15 13:44:03
news-image

மயிலை வேட்டையாடி உண்ட வெளிநாட்டவர்களும் வேடுவ...

2024-06-15 14:40:39
news-image

இன்றைய மரக்கறி விலைகள்

2024-06-15 13:15:00