25 மாவட்டங்களில் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டு விண்ணப்ப சேவை !

Published By: Vishnu

14 Jun, 2023 | 08:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நிகழ்நிலை முறைமை ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு கைரேகை அடையாளத்தை பதிவு செய்யும் புதிய வழிமுறை ஹோமாகம பிரதேச செயலகத்தில் முதலாவதாக புதன்கிழமை (14) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

25 மாவட்டங்களிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக இன்று முதல் இந்த சேவையை பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுமக்களுக்கு அசௌகரியம் இல்லாத வகையில் நிகழ்நிலை முறைமை ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் புதிய தொழில்நுட்ப வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிகழ்நிலை முறைமை ஊடாக விண்ணங்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள விண்ணப்பதாரர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிரதேச செயகல பிரிவுகள்,குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப காரியாலயங்களில் கைரேகை அடையாளத்தை பதிவு செய்து உரிய சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

நிகழ்நிலை முறைமை ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் புதிய முறைமையின் ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை ஹோமாகம பிரதேச செயலக பிரிவில் இடம்பெறவுள்ளது. இந்த புதிய நிகழ்நிலை சேவையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கைரேகை அடையாளத்தை பதிவு செய்யும் சேவை முதற்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள பிரதேச செயலக பிரிவுகள் வருமாறு,.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை,பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவு, அநுராதபுரம் மாவட்டம்-நுவரகம,கெகிராவ,ஹொரவபதான, பதுள்ளை மாவட்டம்-மஹியங்கனை,அப்புதளை, மட்டக்களப்பு மாவட்டம் -கோரளைப்பற்று,காத்தான்குடி, கொழும்பு மாவட்டம் -சீதாவக,ஹோமாகம, காலி மாவட்டம் -கரந்தெனிய,அக்மீமன,நெலுவ, கம்பஹா மாவட்டம் -நீர்கொழும்பு,மீரிகம,கம்பஹா,

மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டம் - தங்காலை,திஸ்ஸமஹாராம,  யாழ்ப்பாணம் மாவட்டம் -சாவகச்சேரி,பருத்தித்துறை,  களுத்துறை மாவட்டம் -இங்கிரிய,மதுகம,பாணந்துறை, கண்டி மாவட்டம்- கம்பளை,குண்டசாலை,பூஜாபிடிய,  கேகாலை மாவட்டம் - கலிகமுவ,ருவன்வெள்ள,கிளிநொச்சி மாவட்டம் -கரைச்சி,  குருநாகல் மாவட்டம் - வடமேல் பிரதேச செயலக பிரிவு,குளியாபிட்டி,நிகவெரட்டிய,

மன்னார் மாவட்டம் -மன்னார் மேல், மாத்தளை மாவட்டம் -நாவுல,   மாத்தறை மாவட்டம் - அதரலிய,தெவிநுவர,  மொனராகலை மாவட்டம் - புத்தல,  முல்லைத்தீவு மாவட்டம் - முல்லைத்தீவு,  நுவரெலியா மாவட்டம் - அபகமுவ ,வலபனை, பொலன்னறுவை மாவட்டம் -எலஹர ,திபுலாகல,ஹிகுரான்கொட, புத்தளம் மாவட்டம் - புத்தளம்,சிலாபம், இரத்தினபுரி மாவட்டம் - பலாங்கொடை,குருவிட,எம்பிலிபிடிய, திருகோணமலை மாவட்டம் -கின்னியா,  வவுனியா மாவட்டம் -வெண்கள செட்டிக்குளம் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30
news-image

06 கோடியே 63 இலட்சம் ரூபா...

2025-01-20 15:55:37
news-image

அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள்...

2025-01-20 15:50:47
news-image

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக...

2025-01-20 15:44:31
news-image

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் வெடிப்புச்...

2025-01-20 15:22:49
news-image

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை...

2025-01-20 15:23:27
news-image

பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும் ஆண்கள்...

2025-01-20 15:47:33
news-image

கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து...

2025-01-20 15:01:23
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-20 15:00:05