வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தம்பதியரை நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு கேகாலையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்பதியருக்கு எதிராக பல முறைப்பாடுகள் பதிவாகியிருந்தமை தொடர்பில் ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி இவர்கள் 820,000 ரூபாவை பெற்று மோசடி செய்துள்ளமை லிசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேகத்தில் கைதான தம்பதியர் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தம்பதியினர் இதேபோன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பலரிடம் பண மோசடி செய்துள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த தம்பதியினரால் ஏமாற்றப்பட்டவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM