20 வயதான யுவதி பாலியல் துஷ்பிரயோகம்:பொலிஸ் சார்ஜன்ட் கைது!

Published By: Digital Desk 3

14 Jun, 2023 | 10:40 AM
image

20 வயதான யுவதியை பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றியவர்  எனவும் அவர் 2021 ஆம் ஆண்டு முதல் நிகவெரட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான  பொலிஸ் சார்ஜன்ட் இந்த யுவதியின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த யுவதி தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த இந்த பொலிஸ் சார்ஜன்ட் அவரைப் பாலியல் துஷ்பிரயோகம்  செய்துள்ளமை தெரிய வருகிறது.   

யுவதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ரஸ்நாயக்கபுர பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48