தமிழரும் முஸ்லிம்களும் தொடர்ந்தும் பிணக்குகளுக்குள் சிக்கியிருப்பது சிறுபான்மை சமூகங்களை ஈடேற்றாது - நஸீர் அஹமட்

Published By: Vishnu

13 Jun, 2023 | 10:20 PM
image

 (எம்.வை.எம்.சியாம்)

முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபை தயாரிக்கும் தருணம் உருவாகியுள்ளது. இனியும் தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாது. தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்தும் பிணக்குகளுக்குள் சிக்கியிருப்பது சிறுபான்மை சமூகங்களை ஈடேற்றாது என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுகிறார். இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறவும், அதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் பொதுவான வரைபை தயாரிக்க வேண்டியுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பறிபோன முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களை மீளப்பெற வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 வீத முஸ்லிம்கள் வாழ்கின்ற நிலையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள பிரதேச செயலகங்களில் 1.3 வீத காணிகளே வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை, திருகோணமலை உள்ளிட்ட வடக்கின் ஏனைய பகுதிகளிலும் இதே நிலையே காணப்படுகிறது. எல்லை நிர்ணய அறிக்கையில் சந்தேகங்கள் மற்றும் பாரிய ஆபத்துகள் காணப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்கள் தொடர்பில் சமூக பிரதிநிதிகளிடம் ஒருமித்த கருத்து நிலவுவது அவசியம்.  கருத்தொற்றுமையுடனும் போதிய ஆவணங்களுடனும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக சகல முஸ்லிம் தலைமைகளும் எம்பிக்களும் தங்களது அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி ஒன்றுபட அழைப்பு விடுக்கிறேன்.

ஒரே தாய்மொழியினராகிய தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்தும் பிணக்குகளுக்குள் சிக்கியிருப்பது சிறுபான்மை சமூகங்களை ஈடேற்றாது என்பதையே வரலாறு உணர்த்தியிருப்பதாக அமைச்சர் நஸீர் அஹமட் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12