ரயில், பஸ் ஆகிய பொது போக்குவரத்து சேவைகளில் பிச்சையெடுப்பது மற்றும்  விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிரான குறைந்தபட்ச அபராதத்தை 5000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், புதிய அபராத சட்டத்தை அதில் உள்வாங்க வேண்டும் என போக்குவரத்து திணைக்கள ஆணையாளரிடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பிச்சைக்காரர்களால் பயணிகளுக்கு தொல்லை ஏற்படுவதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிச்சை எடுப்பதற்கு தடை விதிப்பதோடு, வேறு வழியின்றி பிச்சை எடுப்பவர்களையும் பலவந்தமாக பிச்சைத் தொழிலில் தள்ளப்படுபவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கான மறுவாழ்வை உறுதி செய்து தருவது அரசின் கடமையாகும்.