(எம்.மனோசித்ரா)
தேர்தலொன்றின் போது போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் ஒழுக்கநெறிக் கோவை மீறப்படும் போது ஏற்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் தினத்தன்று குறித்த வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாததென விசேடமாக அடையாளங் காணப்பட்ட வாக்காளர்களுக்காக விசேட வாக்கெடுப்பு நிலையத்தை அமைப்பதற்காக 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022.12.12 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தலொன்றுக்கான பெயர் குறித்த நியமன அறிவித்தல் வெளியிடப்படுகின்ற தினத்திலிருந்து ஊடக வழிகாட்டிகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச்சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் மற்றும் மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் போன்றவற்றைத் திருத்தம் செய்வதற்காக 2022.12.12 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட திருத்தங்களை உள்ளடக்கி குறித்த தேர்தல் சட்டங்களை தனித்தனியாக திருத்தம் செய்வதற்குப் பதிலாக தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் எனும் பெயரிலான புதிய சட்டமொன்றைத் அறிமுகப்படுத்துதல் பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த திருத்தங்களை உள்ளடக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM