இது மரண தண்டனையில்லை ; மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்கள் கதையை சொல்கின்றனர்

Published By: Rajeeban

13 Jun, 2023 | 03:17 PM
image

இன்றைய உலகில் இது மரணதண்டனை இல்லை என்கின்றார் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டுள்ள டெசீரி எட்வேர்ட்ஸ் முன்கூட்டியே கண்டுபிடிப்பதே மிகவும் அவசியமான விடயம் என்பதை மக்கள்புரிந்துகொள்ளவேண்டும் என்கின்றார் அவர்.

22 வருடங்களாக இவர்புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்தார். அப்போது எனக்கு 38 வயது நான் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தேன் என்கின்றார் அவர் .

நான் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்தேன் தயங்கினேன் 40வயதி;ற்கு உட்பட்ட எவரையும் அது பாதிக்கும் என அவ்வேளை நம்பவில்லை இதனால் இரண்டு மூன்று மருத்துவர்களிடம்  சென்றேன் எனவும் அவர் தெரிவிக்கி;ன்றார்.

புற்றுநோயின் பிடியிலிருந்து விடுபட்ட மற்றுமொரு பெண் மிச்சலே லன்ஞ் இவர் 14 வருடங்களிற்கு முன்னர்  பாதிக்கப்பட்டார், அந்த திகதியும் அவருக்கு நன்கு நினைவிருக்கின்றது ஜனவரி 20 - 2009  - பராக் ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்ற தினம்.

எதிர்மறையான கருத்துக்களால் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார் குறிப்பாக புற்றுநோய் குறித்த கற்பிதங்களைஅடிப்படையாக கொண்ட கருத்துக்களால் அதிகம் பாதிக்கப்பட்டேன் எனஅவர் தெரிவித்தார்.

இதுஉனது வாழ்வின் முடிவு ஹீமியோ உன்னை கொல்லப்போகின்றது போன்ற எதிர்மறையான கருத்துக்கள் வெளியானதாக அவர் குறிப்பிடுகின்றார்.

ஜூன் முதல்வாரம் கடைப்பிடிக்கப்படும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிற்கான தினத்தின் போது இவர்கள்இருவரினதும் அனுபவங்களும் வெளியாகியிருந்தன.

இது இந்த நோயிலிருந்து மீண்டவர்களின் கொண்டாட்டத்திற்கான தினம்.

புற்றுநோயின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தினமும் கூட 'புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வலி என்பது ஒரு கட்டம் எனினும் இது சாதாரண நபர்கள் கடக்கவேண்டிய கட்டம் என்கின்றார் எட்வேர்ட்ஸ்.

இது ஒரு இயற்கையான கட்டம் ஆனால் நீங்கள் இந்த கட்டத்திலிருந்து விரைவாக வெளிவரவேண்டும், என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகின்றேன் நீங்கள் இது சாத்தியமற்ற ஒன்று கருதக்கூடாது என நான் விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

அவரை பொறுத்தவரை உறுதியான நம்பிக்கையும் சாதகமான மனோநிலையும் நோயின் காலத்தில் அவரை காப்பாற்றியது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய மனோநிலையின் அவசியம் குறித்து லைன்சும் கருத்து வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52