கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று

13 Jun, 2023 | 09:28 AM
image

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் திருவிழா 189 ஆவது வருடாந்த திருவிழா சனிக்கிழமை (3) கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் இன்று திருவிழா கொண்டாடப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்திற்கு முன்னதாக காலை 6 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொடியேற்றத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான வழிபாடுகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

திங்கட்கிழமை 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

திருவிழா தினமான 13 ஆம் திகதி இன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

இதேவேளை, பெருவிழா திருப்பலிகள் இன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா தலைமையில் சிங்கள மொழியிலும் நண்பகல் 12 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் அன்ரனி ஜயக்கொடி ஆண்டகை தலைமையில் ஆங்கில மொழியிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்திலிருந்து மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் பெருவிழா நிறைவுபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00